நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு 100 வார்டுகளுக்கு வேட்புமனுக்களைப் பெற, 20 மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டநிலையில், இன்று காலை முதல் ஒரு வேட்பாளர் கூட வேட்பு மனு தாக்கல் செய்ய வரவில்லை.
கோவை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு 100 வார்டுகளுக்கு வேட்புமனுக்களைப் பெற, 20 மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டநிலையில், இன்று காலை முதல் ஒரு வேட்பாளர் கூட வேட்பு மனு தாக்கல் செய்ய வரவில்லை.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு இன்று முதல் வேட்புமனுக்கள் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளின் வேட்புமனுக்களைப் பெற, 20 மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால், இன்று காலை முதல் இதுவரை அந்த 20 மையங்களில் ஒரு வேட்பாளர் கூட வேட்பு மனு தாக்கல் செய்ய வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான பணிகள் தீவிரம் அடைந்துள்ளது. இதன் ஒரு பகுதியாகக் கோவை மாவட்டத்தில் கோவை மாநகராட்சி, 7 நகராட்சி, 33 பேரூராட்சிகளில் 811 பதவிகளுக்குத் தேர்தல் நடைபெறுகின்றது.
இந்நிலையில் கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெறும் நிலையில், 5 வார்டுகளுக்கு ஒரு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் என்று நியமிக்கப்பட்டு. முதல் வேட்புமனு இன்று பெறப்பட்டது.
இந்நிலையில் முதல் நாளான இன்று கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கு 20 இடங்களில் வேட்பு மனுக்கள் தாக்கல் துவங்கிய நிலையில் வேட்புமனு தாக்கல் எதுவும் இல்லை. சுயட்சி வேட்பாளர்கள் இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.