கோவையில் 16-வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோவில் கைது

மாதம்பட்டியில் 16-வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய இளைஞரை போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையிலடைத்தனர்.


கோவை: மாதம்பட்டியில் 16-வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய இளைஞரை போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையிலடைத்தனர்.

கோவை மாதம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் (20). இவர் பழக்கடையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது உறவினர் வீடு பொள்ளாச்சி ஆனைமலை உள்ளதால் அவ்வப்போது ஆனை மலைக்கு வந்து செல்வது வழக்கம்.

ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவில் திருவிழாவுக்கு தினேஷ்குமார் வந்துள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த 16-வயது சிறுமிக்கும், தினேஷ்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. பெற்றோர்கள் அவரை சிகிச்சைக்காகப் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, மருத்துவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ஆனைமலை காவல்துறை விசாரணை நடத்தினர். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதன் பேரில் காவல்துறை போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து தினேஷ் குமாரைக் கைது செய்தனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...