தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

விலங்குகள் பலியாவதைக் தடுக்க கோவை - மைசூரு - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்துக்குத் தடை விதிப்பது குறித்துப் பரிசீலிக்கும்படி, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கோவை: விலங்குகள் பலியாவதைக் தடுக்க கோவை - மைசூரு - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்துக்குத் தடை விதிப்பது குறித்துப் பரிசீலிக்கும்படி, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் யானைகள் வேட்டையாடுதல், சாலை விபத்தில் பலி போன்றவற்றைத் தடுக்க உத்தரவிடக் கோரிய வழக்கைச் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ் குமார் அமர்வு விசாரித்தது.

கடந்த 10 ஆண்டுகளில் மூன்று சிறுத்தைகள் உட்பட 152 வனவிலங்குகள் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் அமைந்துள்ள தெங்குமரஹடா கிராம மக்களை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளைக் கண்டறியத் தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தெங்குமரஹடா கிராமப் பகுதியில் 30 சதவீத புலிகள் நடமாட்டம் இருப்பதாகவும், அது வனவிலங்குகளின் இனப்பெருக்க பகுதியாக உள்ளதாகவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...