மதுரையிலிருந்து கோவை பூமார்க்கெட்டுக்கு கொண்டு வந்த துளசி இலை மூட்டையில் பாம்பு - வியாபாரிகள் அலறியடித்து ஓட்டம்..!

இதையடுத்து, உடனடியாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. வனத்துறை அதிகாரிகள் பாம்பை அடர்ந்த வனத்தில் விட்டனர்.


கோவை: மதுரையிலிருந்து கோவை பூமார்க்கெட்டுக்கு கொண்டு வந்த துளசி இலை மூட்டையில் பாம்பு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வியாபாரிகள், பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

கோவை ஆர்.எஸ்.புரத்தில் பூமார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள், திண்டுக்கல், சத்தியமங்கலம், நிலக்கோட்டை, ஓசூர், ஊட்டி மற்றும் மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விற்பனைக்காக பூக்கள் மற்றும் துளசி உள்ளிட்டவை கொண்டுவரப்படுகின்றன.

மேலும், இங்கு இருந்து கேரளா மற்றும் வெளிநாடுகளுக்கும் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதுதவிர சிறிய வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்து பூக்களை வாங்கி செல்கின்றனர்.

இதனால் இங்கு காலை மற்றும் மாலை என இரு வேளைகளில் பூக்கள் ஏலம் விடப்பட்டு அதன் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

இந்தநிலையில், மதுரையில் இருந்து கோவை பூமார்க்கெட்டுக்கு துளசி இலை மூட்டைகள் கொண்டு வரப்பட்டன. துளசி இலை மூட்டையை விற்பனையாளர்கள் திறந்து பார்த்தனர். அப்போது துளசி மூட்டையின் உள்ளே துளசிக்குள் பாம்பு ஒன்று நெளிந்துகொண்டு இருந்தது. இதைப்பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர், அவர்கள் அந்த துளசி மூட்டையை விட்டு பாம்பு வெளியே வராதவாறு கயிற்றால் கட்டிவைத்தனர். இதற்கிடையே துளசி மூட்டையில் பாம்பு இருந்த சம்பவம் பூமார்கெட் பகுதியில் பரவியது. இதனால் அங்கு இருந்த வியாபாரிகள், பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து மார்க்கெட் பூ வியாபாரிகள் இதுகுறித்து விலங்கு மீட்பு அமைப்பை சேர்ந்த விவேக் என்பவருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அவர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார்.



பின்னர் அந்த துளசி மூட்டையில் இருந்த பாம்பை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்.

இதுகுறித்து விவேக் கூறியதாவது:-

பூமார்க்கெட்டுக்கு வந்த துளசி மூட்டையில் இருந்தது கொடிய விஷம் கொண்ட சுருட்டை விரியன் பாம்பு ஆகும். அதை உடனே மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. வனத்துறை அதிகாரிகள் அதை அடர்ந்த வனத்தில் விட்டனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...