திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று துவக்கம்..!

மேலும், சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் மூலம் வேட்புமனுக்கள் பெறும் அலுவலகங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.



திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று துவங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு பணிகள் தொடங்கி நடைபெற்று வரக்கூடிய சூழ்நிலையில், திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில் வேட்பு மனுத்தாக்கல் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் உட்பட எட்டு இடங்களில் 8 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களால் வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.



இந்நிலையில், முதல் நாளான இன்று திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் வேட்புமனு படிவங்களைப் பெற பல்வேறு அரசியல் கட்சியினர் ஆர்வத்துடன் வந்து வாங்கிச் சென்று வருகின்றனர்.



கொரோனா தடுப்பு விதிமுறைகள் அமலில் இருப்பதன் காரணமாக மாநகராட்சி அலுவலகத்திற்கு வருபவர்களுக்கு சானிடைசர் கொடுக்கப்பட்டு.



உடல் வெப்ப நிலையை பரிசோதித்த பின் அனுமதித்து வருகின்றனர்.



மேலும், வேட்பு மனுக்கள் பெறப்படும் 8 இடங்களிலும் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டு மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து மாநகராட்சி ஆணையாளரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்திகுமார் முன்னிலையில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...