கோவை வந்தடைந்தது குடியரசு தின அலங்கார ஊர்தி...!

பாரதியார், வ.உ.சிதம்பரனார் உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களின் உருவங்கள் இருக்கும் அலங்கார ஊர்தி கோவை வந்தடைந்தது. கோவை மாவட்ட எல்லையான தெக்கலூர் பகுதியில் அலங்கார ஊர்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.



கோவை: மத்திய அரசு நிராகரித்த தமிழக அலங்கார ஊர்தி, கோவை மாவட்ட எல்லையான தெக்கலூர் பகுதியில் ஒய்யாரமாக ஊர்வலம் வந்தது.

குடியரசு தின விழா டெல்லி அணிவகுப்பில் தமிழக ஊர்திகளுக்கு சில காரணங்களால் அனுமதி மறுக்கப்பட்டது.அவ்வாறு அனுமதி மறுக்கப்பட்ட ஊர்திகள் அணிவகுப்பு சென்னையில் நடைபெற்றது. மேலும் அலங்கார ஊர்திகள் தமிழகம் முழுவதும் வலம் வரும் என தமிழக முதலமைச்சர் அறிவித்திருந்தார்.

அதன் படி பாரதியார், வ.உ.சிதம்பரனார் உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களின் உருவங்கள் இருக்கும் அலங்கார ஊர்தி கோவை வந்தடைந்தது. கோவை மாவட்ட எல்லையான தெக்கலூர் பகுதியில் அலங்கார ஊர்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.



மாவட்ட நிர்வாகம் சார்பில் அலங்கார ஊர்திக்கு மேளதாளங்கள் முழங்க மலர் தூவியும், மாலை அணிவித்தும் வரவேற்பளிக்கப்பட்டது.



வருவாய்க் கோட்டாட்சியர் இளங்கோ, மாவட்ட தகவல் தொடர்பு அதிகாரி செந்தில், சூலூர் வட்டாட்சியர் சகுந்தலா மணி, மண்டல துணை வட்டாட்சியர் பாண்டியன் உள்ளிட்ட அதிகாரிகள் அலங்கார ஊர்திக்கு வரவேற்பளித்தனர்.



இந்த அலங்கார ஊர்தியில் பாரதியார், விஜயராகவாச்சாரி, சுப்பிரமணிய சிவா, சிதம்பரனார், சுதேசி கப்பல், வ.உ.சிதம்பரனார், சிறையில் செக்கிலுத்த காட்சிகளும், பாரதியாரின் சாதிகள் இல்லையடி பாப்பா என்றவசனமும் இடம்பெற்றுள்ளன. இதனைப் பொதுமக்கள் அனைவரும் வழி நெடுகிலும் கண்டு மகிழ்ந்தனர்.

கோவை வ.உ.சி மைதானத்தில் 3 நாட்கள் பொதுமக்கள் பார்வைக்காகக் காட்சிப்படுத்தப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து திங்கட்கிழமை காலை கோவையிலிருந்து புறப்பட்டு திருச்சி சாலை மார்க்கமாகத் திருப்பூர் செல்ல உள்ளது.

Newsletter

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...