டெல்லியில் நடந்த குடியரசு தின விழாவில் பரதநாட்டியம் ஆடிய கோவை மாணவிகளுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு..!

கோவையை சேர்ந்த ஸ்ரீ நாட்டிய நிகேதன் குழுவைச் சேர்ந்த பரதநாட்டிய மாணவிகள் 14 பேர் கலந்துகொண்டு 11 நிமிடங்கள் பரதநாட்டிய நடனமாடினர்.



கோவை: டெல்லியில் நடந்த குடியரசு தின விழாவில் பரதநாட்டியம் ஆடிய கோவை மாணவிகளுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

73வது குடியரசு தினத்தில், டெல்லி ராஜபாதையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குடியரசு தின விழா நடைபெற்றது.

இதில் துணை குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட பிற மத்திய அமைச்சர்கள், முப்படைத் தளபதிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த விழாவில் இந்திய நாட்டின் பெருமையை பறை சாற்றும் விதமாக அலங்கார ஊர்திகள் அணிவகுப்பும் நடைபெற்றது.

இதனையடுத்து, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் கலாச்சாரங்களை வெளிப்படுத்தும் விதமாக மாநிலங்களின் நடனம் மற்றும் இசை, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.



அதில் கோவையை சேர்ந்த ஸ்ரீ நாட்டிய நிகேதன் குழுவைச் சேர்ந்த பரதநாட்டிய மாணவிகள் 14 பேர் கலந்துகொண்டு 11 நிமிடங்கள் பரதநாட்டிய நடனமாடினர்.



இதனையடுத்து, கோவை திரும்பிய அவர்களுக்கு கோவை விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு கலைத்துறையினர் அவர்களுக்கு பூங்கொத்து அளித்து வரவேற்பு அளித்தனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...