கோவையில் இன்று உள்ளாட்சித் தேர்தல் வேட்பு மனு தாக்கல் - பலத்த போலீஸ் பாதுகாப்பு..!

கோவை மாநகராட்சியில் 20 இடங்களில் வேட்பு மனு தாக்கல் செய்ய அலுவலகங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.


கோவை: கோவையில் உள்ளாட்சித் தேர்தல் வேட்பு மனு தாக்கல் இன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு அலுவலகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.



நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் வேட்பு மனு தாக்கல் செய்யப்படுகிறது.

கோவை மாநகராட்சியில் 20 இடங்களில் வேட்பு மனு தாக்கல் செய்ய அலுவலகங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான விண்ணப்பங்களை தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் அந்தந்த அலுவலகத்தில் வாங்கிச்செல்கின்றனர்.

இன்று காலை முதல் இந்த விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் விண்ணப்பங்களை வாங்க வரும் வேட்பாளர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, வேட்பாளர்களுக்கு அலுவலக நுழைவாயிலில் கிருமி நாசினிகள் வழங்கப்படுகிறது. மேலும் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை பின்பற்றி வேட்பாளர்கள் வேட்புமனு விண்ணப்பங்களை பெற்று செல்கின்றனர்.

மேலும், இன்று முதலே வேட்புமனு தாக்கல் செய்ய அறிவிக்கப்பட்டுள்ளதால் அனைத்து அலுவலகங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...