தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் முகாம் அலுவலகத்தில் தனிமைப் படுத்திக்கொண்டுள்ளார்.
கோவை: கோவை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் அவர்களுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, முகாம் அலுவலகத்தில் தனிமைப் படுத்திக்கொண்டுள்ளார்.
இதன் காரணமாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவரது தலைமையில் நடைபெற இருந்த நிகழ்வுகள் பயிற்சி ஆட்சியர் தலைமையிலோ அல்லது வருவாய் அலுவலர் முன்னிலையிலோ மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, நேற்று முன்தினம் குடியரசு தின விழாவில் வ.உ.சி மைதானத்தில் ஆட்சியர் சமீரன் கலந்து கொண்டார். நேற்று அவரது நிகழ்வுகள் எதுவும் நடைபெற வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.