அரியலூர் மாணவி விவகாரத்தில் பழி தீர்க்க, கோவை தேவாலய சிலையை உடைத்தது அம்பலம் : இந்து முன்னணியை சேர்ந்த சிறுவன் உட்பட இருவர் கைது.

பிடிபட்ட குற்றவாளிகளிடம் நடத்திய விசாரணையில், தஞ்சாவூர் மாணவி மதமாற்ற விவகாரம் தொடர்பாக தற்கொலை விவகாரத்திற்கு எதிர் வினையாற்றும் விதமாக, கோவை இராமநாதபுரம் டிரினிட்டி தேவாயலயத்தை சேதப்படுத்தியதாக பிடிபட்ட நபர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.


கோவை: கோவை ராமநாதபுரம்டிரினிட்டி தேவாலயத்தில் செபஸ்தியர் சிலையை சேதப்படுத்தியது தொடர்பாக இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த 16 வயது சிறுவன் உட்பட 3 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சம்பவத்தில், தொடர்புடைய மேலும் ஒரு இந்து முன்னணியை சேர்ந்த நபரை தேடி வருகின்றனர்.

கோவை தேவாலயத்தில் சிலை உடைப்பு

கோவை ராமநாதபுரம் டிரினிட்டி தேவாலயத்தின்வாயிலில் இருந்த புனித செபஸ்தியர் சிலை கடந்த 23 ம் தேதி நள்ளிரவில் சேதப்படுத்தபட்டது. இரு சக்கர வாகனத்தில் வந்த நபர்கள் செபஸ்தியர் சிலையை சேதப்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இச்சம்பவம், கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

சம்பவம் தொடர்பாக பல்வேறு அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்த நிலையில், சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

காட்டிக்கொடுத்த சிசிடிவி

விசாரணையில் அங்குபதிவாகி இருந்த சி.சி.டி.வி கேமரா பதிவுகள் மூலம் குற்றவாளிகளை, போலீசார் அடையாளம் கண்டுகொண்டார்.

அந்த சிசிடிவி பதிவுகள் மூலம், இந்து முன்னணி அமைப்பினை சேர்ந்த நபர்கள் அந்த தேவாலயம் உள்ள பகுதியில் சுற்றி வந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, இது குறித்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், அந்த அமைப்பை சேர்ந்த 16 வயது சிறுவன்மற்றும் மதன்குமார் என்ற இளைஞர் எனஇருவரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

விசாரணையில் நோக்கம் அம்பலம்.

பிடிபட்ட, 16 வயது சிறுவன் மற்றும் மதன்குமார் ஆகிய இருவரிடமும் நடத்திய விசாரணையில், இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த மூர்த்தி மற்றும் தீபக் ஆகயோருடன் சேர்ந்து சிலையை உடைத்ததையும், இதில், தீபக் தேவாலயத்திக்குள் சென்று செபஸ்தியர் சிலையை உடைத்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, தனிப்படை போலீசார் தீபக் மற்றும் மூர்த்தி ஆகிய இருவரை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று இந்து முன்னணியை சேர்ந்த தீபக்கை போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மூர்த்தியை தேடி வருகின்றனர்.

பிடிபட்ட குற்றவாளிகளிடம் நடத்திய விசாரணையில், தஞ்சாவூர் மாணவி மதமாற்ற விவகாரம் தொடர்பாக தற்கொலை விவகாரத்திற்கு எதிர் வினையாற்றும் விதமாக, கோவை இராமநாதபுரம் டிரினிட்டி தேவாயலயத்தை சேதப்படுத்தியதாக பிடிபட்ட நபர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த 16 வயது சிறுவனை, சிறுவர் கூர்நோக்கு இல்லத்திலும், மதன்குமார் மற்றும் தீபக் ஆகிய இருவரை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி பின்னர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...