கோவை உள்ளாட்சி தேர்தல்: விதிமுறை மீறல் குறித்து புகார் அளிக்க தொலைபேசி எண் - மாநகராட்சி அறிவிப்பு.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான புகார்கள், சந்தேகங்களுக்கு , கோவை மாநகராட்சியின் தேர்தல் கட்டுப்பாட்டு அறை எண் 0422 - 2300132, தொடர்பு கொள்ளலாம் - மாநகராட்சி ஆணையர்


கோவை:

கோவை மாநகராட்சியில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான புகார்கள் தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா கூறியதாவது, "தேர்தல் தொடர்பான ஒவ்வொரு நடவடிக்கையின் போதும், அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் அறைகள், அரங்குகள், வளாகத்துக்குள் நுழையும் போது அனைவரையும் தெர்மல் ஸ்கேனிங்குக்கு உட்படுத்த வேண்டும்.

அவ்வப்போது, சோப்பு, கிருமிநாசினிகளை பயன்படுத்த வேண்டும்.

6 அடி சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். வேட்புமனு தாக்கல் தொடங்கும் முன் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோரின் அறைகள் தினமும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்பட வேண்டும். வேட்பு மனு தாக்கலுக்கு வேட்பாளர்கள் வருகையின் போது 2 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

வேட்பு மனு செய்யும் போது, முதல் வேட்பாளர் வெளியே வந்த பிறகே, அடுத்த வேட்பாளர் நுழைய அனுமதிக்கப்படுவார். நிர்ணயிக்கப்படும், நேரத்துக்குள் தேர்தல் நடத்தும் அலுவலரின் அறைக்குள் வரும் அனைத்து வேட்பாளர்களுக்கும் டோக்கன்கள் வழங்கப்படும். நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு முன்னதாக தேர்தல் நடத்தும் அலுவலரின் அறைக்குள் நுழைபவர்கள் மட்டுமே வேட்பு மனுக்களை சமர்பிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான புகார்கள், சந்தேகங்களுக்கு , கோவை மாநகராட்சியின் தேர்தல் கட்டுப்பாட்டு அறை எண் 0422 - 2300132, தொடர்பு கொள்ளலாம்", என்று மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...