நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக பொது வழிகாட்டுதல்கள் வெளியீடு

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. இந்நிலையில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் பொது வழிகாட்டுதல்கள் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.



கோவை: தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் அறிவிக்கையின்படி, 2022 ம் ஆண்டிற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நாள் 19.02.2022 அன்றும், வாக்கு எண்ணிக்கை நாள் 22.02.2022 அன்றும் நடைபெறவுள்ளது.

அதன் அடிப்படையில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறிந்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்ததாவது:

பொது வழிகாட்டுதல்கள்:

தேர்தல் தொடர்பான ஒவ்வொரு நடவடிக்கைகளின் போதும் ஒவ்வொரு நபரும் முகக்கவசம் அணிய வேண்டும். தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் அறைகள் / அரங்குகள் / வளாகங்களுக்குள் நுழையும் போது அனைவரும் தெர்மல் ஸ்கேனிங்கிற்கு உட்படுத்தப்பட வேண்டும்மற்றும் சோப்பு / சானிடைசர் பயன்படுத்த வேண்டும்.

மாநில அரசு மற்றும் உள்துறை அமைச்சகத்தின் கோவிட் 19 வழிகாட்டுதல்களின்படி 6 அடிசமுக இடைவெளி பராமரிக்க வேண்டும். பெரிய அரங்குகள் கண்டறியப்பட்டு தோதல் தொடர்பான நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தவும் அதிக கூட்டம் தவிர்க்கப்பட வேண்டும்.

வேட்புமனு தாக்கல்:

வேட்புமனு தாக்கல் தொடங்கும் முன் தேர்தல் நடத்தும் அலுவலர் / உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோரின் அறைகள் தினமும் கிருமி நீக்கம் செய்யப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கலுக்கு வேட்பாளர் வரும்போது வாகனம் இரண்டு வாகனங்கள் வரை மட்டுமே அனுமதிக்கப்படும்.

தேர்தல் நடத்தும் அலுவலரின் அறை வேட்பு மனுதாக்கல், பரிசீலனை மற்றும் சின்னம் ஒதுக்கீடு போன்ற பணிகளுக்கு சமூக இடைவெளியைப் பின்பற்றப்பட வேண்டும். வேட்பாளர்கள் காத்திருப்பதற்காகப் பெரிய அளவிலான அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வேட்புமனு தாக்கல் செய்யும்போது வேட்பாளர் அல்லது ஒரு முன்மொழிபவர் மட்டுமே தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திற்கு வெளியே உள்ள காத்திருப்பு அறைக்குள் சரியான சமூக இடைவெளியை (2 மீட்டர் / 6 அடி) பராமரிக்க வேண்டும். வேட்பாளர் அல்லது அவரை முன்மொழிபவர் தேர்தல் நடத்தும் அலுவலரின் அறையில் நுழைய அனுமதிக்கப்படுவார்.

முதல் வேட்பாளர் வெளியே வந்த பின்னரே அடுத்த வேட்பாளர் நுழைய அனுமதிக்கப்படுவார். நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் தேர்தல் நடத்தும் அலுவலரின் அறைக்குள் வரும் அனைத்து வேட்பாளர்களுக்கும் முதலில் வருபவர்களுக்கு முதலில் டோக்கன்கள் வழங்கப்படும்.

நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்கு முன்னதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறைக்குள் நுழைபவர்கள் மட்டுமே வேட்பு மனுக்களை சமர்பிக்க அனுமதிக்கப்படுவார்கள். கோவிட் பாசிட்டிவ் நோயாளி தனது முன்மொழிபவர் மூலமாக மட்டுமே வேட்புமனுக்களைச் சமர்ப்பிக்க வேண்டும் வேட்பாளர்கள் தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்திற்குள் நுழைவதற்கு முன் சோப்பு / சானிடைசரால் கைகளை கழுவ வேண்டும்.

முகக்கவசம் மற்றும் கையுறைகளைக் கட்டாயமாக அணிய வேண்டும். மேலும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார்கள் / சந்தேகங்களுக்குக் கோவை மாநகராட்சியின் தேர்தல் கட்டுப்பாட்டு அறை எண் 0422-2300132 எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...