கோவையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 41-தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 110-உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒரு வாக்குச்சாவடிக்கு 4- வாக்குப்பதிவு அலுவலர்கள் வீதம் சுமார் 10172-அலுவலர்கள் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
கோவை: கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 41 தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 110 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒரு வாக்குச்சாவடிக்கு 4 வாக்குப்பதிவு அலுவலர்கள் வீதம் சுமார் 10172 அலுவலர்கள் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளதாவது:-
தமிழக மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவிக்கையின்படி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி வேட்பு மனுக்கள் பெறுதல் வரும் 28-ம் தேதி காலை 10 மணி முதல் 5 மணி வரை பெறப்படும்.
வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான இறுதி நாள் அடுத்த மாதன் 4ம் தேதி ஆகும். வேட்பு மனுக்கள் ஆய்வு செய்தல் அடுத்த மாதம் 5ம் தேதி. வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுதல் அடுத்த மாதம் 7ம் தேதி. வாக்குப்பதிவு நடைபெறும் நாள் அடுத்த மாதம் 19ம் தேதி காலை 7 மணி முதல் 6 மணி வரை நடைபெறும்.
கடைசி ஒரு மணி நேரம் 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா அறிகுறி உள்ளவர்கள் மற்றும் பாதிப்புக்கு உள்ளானவர்கள் மட்டும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் அடுத்த மாதம் 22ம் தேதி ஆகும்.
தேர்தல் நடவடிக்கைகள் முடிவு பெறும் நாள் அடுத்த மாதம் 24ம் தேதி, தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்களின் முதல் கூட்டம் மற்றும் பதவி ஏற்பு நாள் மார்ச் மாதம் 2ம் தேதி, மறைமுகத் தேர்தல்கள் மூலம் மாநகராட்சிகளுக்கான மேயர் மற்றும் துணை மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகியோரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்ட நாள் மார்ச் மாதம் 4ம் தேதி ஆகும்.
கோவை மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 7 நகராட்சிகள் மற்றும் 33 பேரூராட்சிகள் என மொத்தம் 41 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக, கோவை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டு உறுப்பினர் பதவியிடங்களும், 7 நகராட்சிகளுக்குட்பட்ட 198 வார்டு உறுப்பினர் பதவியிடங்களும், 33 பேரூராட்சிகளுக்குட்பட்ட 513 வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் தேர்தல் நடைபெறவுள்ள உள்ளது.
இத்தேர்தலில் கோவை மாநகராட்சிக்கு 1290 வாக்குச்சாவடிகள், 7 நகராட்சிகளுக்கு 390 வாக்குச்சாவடிகள் மற்றும் 33 பேரூராட்சிகளுக்கு 632 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 2312 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறும். இத்தேர்தலில் 41 தேர்தல் நடத்தும் அலுவலர்களும் 110 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒரு வாக்குச்சாவடிக்கு 4 வாக்குப்பதிவு அலுவலர்கள் வீதம் சுமார் 10172 அலுவலர்கள் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. எனவே அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றித் தேர்தலை அமைதியாகவும், சுதந்திரமாகவும் மற்றும் பாதுகாப்பாகவும் நடைபெற எல்லாவிதத்திலும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.