வாக்கு எண்ணும்‌ மையத்தில் கோவை மாநகராட்சி ஆணையாளர்‌ ஆய்வு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக தடாகம்‌ ரோடு, ஜி.சி.டி. கல்லூரி வாக்கு எண்ணும்‌ மையத்தினை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தேர்தல்‌ நடத்தும்‌ அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா‌ இன்று நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌.


கோவை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக தடாகம்‌ ரோடு, ஜி.சி.டி. கல்லூரி வாக்கு எண்ணும்‌ மையத்தினை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தேர்தல்‌ நடத்தும்‌ அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா‌ இன்று நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சியின்‌ 100 வார்டுகளிலும்‌ நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக தடாகம்‌ ரோடு, ஜி.சி.டி. கல்லூரி வாக்கு எண்ணும்‌ மையத்தினை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தேர்தல்‌ நடத்தும்‌ அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா‌ இன்று (27.01.2022) நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌.



தமிழ்நாடு மாநில தேர்தல்‌ ஆணையத்தின்‌ அறிவிக்கையின்படி, 2022-ம்‌ ஆண்டிற்கான நகா்ப்புற உள்ளாட்சித்‌ தேர்தல்‌ வாக்குப்பதிவு நாள்‌ 19.02.2022 அன்றும்‌, வாக்கு எண்ணிக்கை நாள்‌ 22.02.2022 அன்றும்‌ நடைபெறவுள்ளது.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சியின்‌ 100 வார்டுகளுக்கும்‌ வாக்கு எண்ணும்‌ மையமான தடாகம்‌ சாலையில்‌ உள்ள ஜி.சி.டி. கல்லூரி வாக்கு எண்ணும்‌ மையத்தில்‌ நகா்புற உள்ளாட்சித்‌ தேர்தலுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும்‌ ஆயத்த பணிகளான நுழைவு வழி, வெளியேறும்‌ வழி, மேஜைகள்‌ அமைத்தல்‌, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வைக்கக் கூடிய (Strong Room) உட்புறம்‌ மற்றும்‌ வெளிப்புறம்‌, பார்வையாளர்‌ அரங்கு, பத்திரிக்கையாளர்கள்‌ அரங்கு அமைத்தல்‌ உள்ளிட்ட பணிகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருவதை நேரில்‌ பார்வையிட்டார்.



இப்பணிகளை விரைந்து முடிக்கச் சம்மந்தப்பட்ட பொறியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தேர்தல்‌ நடத்தும்‌ அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா அறிவுறுத்தினார்‌.

இந்த ஆய்வின்போது மாநகராட்சி துணை ஆணையாளர்‌ மற்றும்‌ உதவி தேர்தல்‌ நடத்தும்‌ அலுவலர்‌ மோ.ஷாமிளா, மாநகரப்‌ பொறியாளர்‌ (பொ) ராமசாமி, உதவி செயற்பொறியாளர்‌ சுந்த்ராஜ்‌, உதவி நகரமைப்பு அலுவலர்‌ புவனேஸ்வரி, மற்றும்‌ மாநகராட்சி பொறியாளர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...