கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துக் கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்..!

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள அரசுப் போக்குவரத்து தலைமை பணிமனை முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துக் கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள அரசுப் போக்குவரத்து தலைமை பணிமனை முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கழக தொழிலாளர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



"ஊதிய ஒப்பந்தத்தை உடனே நிறைவேற்ற வேண்டும். அகவிலைப்படி உயர்வை வழங்கிட வேண்டும். மலைவாழ் படி வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இதனையடுத்து, ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல செயலாளர் கோபால் தலைமை தாங்கினார். சிஐடியு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வேளாங்கன்னிராஜ், ஐஎன்டியுசி தௌத்கான், ஏஐடியுசி சண்முகம் மற்றும் எச்எம்எஸ் தொழிற்சங்க தலைவர்கள் நோக்கங்கள் குறித்து உரையாற்றினர்.



இதில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் போக்குவரத்துக் கழக நிர்வாகம் மற்றும் தமிழக அரசை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...