கோவையில் பைனான்ஸ் அதிபர் வெட்டிக்கொலை: 2 பேர் காவல் நிலையத்தில் சரண்..!

இந்து முன்னணியில் இருந்து விலகிய பைனான்ஸ் அதிபர் கடந்த வாரம் திமுகவில் இணைந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கோவை: கோவையில் பைனான்ஸ் அதிபரை வெட்டிக்கொன்ற 2 பேர் போலீசாரிடம் சரண் அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம், அன்னூர் அருகே நாகமாபுதூரை சேர்ந்த சுந்தரம் மகன் சரவணன் (19). இவர் பைனான்ஸ் நடத்தி வந்தார்.

இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு அன்னூரில் கோவை ரோட்டில் மைல்கல் அருகே நின்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், சரவணனை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். பின்னர் அன்னூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

போலீசார் விசாரணையில் சரணடைந்த இருவரில் ஒருவர், அன்னூர் அருகே உள்ள பிள்ளையப்பம் பாளையத்தை சேர்ந்த கண்ணன் மகன் தமிழ்ச்செல்வன் (20). சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருபவர். மற்றொருவர் கோவில்பாளையம் அருகே உள்ள குரும்பபாளையம் அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் ராஜராஜன் (22) என தெரியவந்தது.

இதுகுறித்து மேட்டுப்பாளையம் டிஎஸ்பி பாலமுருகன் விசாரணை நடத்தி வருகிறார். முதல்கட்ட விசாரணையில் மூவரும் இந்து முன்னணியில் இருந்தனர். கொலையான சரவணன் அவர்களிடமிருந்து விலகி தனியாக பைனான்ஸ் நடத்தி வந்துள்ளார். இந்து முன்னணியிலும் இருந்து விலகிய சரவணன் கடந்த வாரம் திமுகவில் இணைந்துள்ளார்.

இந்நிலையில், இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது என்று போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Newsletter

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...