கோவையில் உள்ளாட்சித் தேர்தலுக்கு வேட்புமனு பெறப்படும் இடங்கள் வெளியீடு..!

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 20 இடங்களில் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என மாநகராட்சி சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: உள்ளாட்சித் தேர்தலுக்கு கோவை மாநகராட்சி சார்பாக வேட்புமனு பெறப்படும் இடங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக அடுத்த மாதம் 19ம் தேதி நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நாளை தொடங்குகிறது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏற்கனவே தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

21 மாநகராட்சிகளுக்கு உட்பட்ட 1,374 வார்டு உறுப்பினர் பதவியிடங்கள், 138 நகராட்சிகளுக்கு உட்பட்ட 3,843 வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் மற்றும் 490 பேரூராட்சிகளுக்கு உட்பட்ட 7,621 வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் என மொத்தம் 12,838 பதவியிடங்களுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.

கோவை மாநகராட்சியில் 100 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு நேரடித் தேர்தல் நடக்கிறது‌. இதற்கான வேட்புமனு நாளை முதல் பெறப்படுகிறது. கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 20 இடங்களில் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என மாநகராட்சி சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை வடக்கு மண்டல அலுவலகத்தில் உதவி ஆணையாளர் அறையில் 13, 18, 19, 29, 30 ஆகிய வார்டுக்கும், நிர்வாக அலுவலர் அறையில் 1, 2, 3, 14, 15 ஆகிய வார்டுக்கும், மண்டல சுகாதார அலுவலர் அறையில் 4, 10, 11, 12, 21 ஆகிய வார்டுக்கும், வார்டு குழு தலைவர் அறையில் 20, 25, 26, 27, 28 ஆகிய வார்டுகளை சேர்ந்தவர்கள் வடக்கு மண்டலத்தில் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

கிழக்கு மண்டலத்தில் உதவி செயற்பொறியாளர் அறையில் 5, 6, 8, 9, 22 ஆகிய வார்டுகளும், மண்டல சுகாதார அலுவலர் அறையில் 55, 56, 57, 58, 61 ஆகிய வார்டுகளும், உதவி ஆணையாளர் அறையில் 7, 23, 24, 54, 59 ஆகிய வார்டுகளும், வார்டு குழு தலைவர் அறையில் 50, 51, 52, 53, 60 ஆகிய வார்டுகளை சேர்ந்தவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

தெற்கு மண்டலத்தில் உதவி ஆணையாளர் அறையில் 87, 88, 89, 90, 91 ஆகிய வார்டுகளும், நிர்வாக அலுவலர் அறையில் 92, 93, 94, 95, 97 ஆகிய வார்டுகளும், உதவி செயற்பொறியாளர் அறையில் 76, 77, 78, 79, 86 ஆகிய வார்டுகளும், வார்டு குழு தலைவர் அறையில் 85, 96, 98, 99, 100 ஆகிய வார்டுகளை சேர்ந்தவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

மேற்கு மண்டலத்தில் உள்ள உதவி ஆணையாளர் அறையில் 71, 72, 73, 74, 75 ஆகிய வார்டுகளும், உதவி செயற்பொறியாளர் அறையில் 36, 42, 43, 44, 45 ஆகிய வார்டுகளும், மண்டல சுகாதார அலுவலர் அறையில் 37, 38, 39, 40, 42 ஆகிய வார்டுகளும், வார்டு குழு தலைவர் அறையில் 16, 17, 33, 34, 35 ஆகிய வார்டுகளை சேர்ந்தவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

மத்திய மண்டலத்தில் உள்ள உதவி ஆணையாளர் அறையில் 62, 63, 64, 65, 84 ஆகிய வார்டுகளும், நிர்வாக அலுவலர் அறையில் 48, 49, 67, 68, 70 ஆகிய வார்டுகளும், வார்டு குழு தலைவர் அறையில் 66, 80, 81, 82, 83 ஆகிய வார்டுகளை சேர்ந்தவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

இதேபோல, கோவை டாடாபாத் பொறியியல் பிரிவு அலுவலகத்தில் 31, 32, 46, 47, 69 ஆகிய வார்டுகளை சேர்ந்தவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜகோபால் சுன்காரா தெரிவித்துள்ளார்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...