வேளாண் மின் இணைப்பு புகார் மீது உடனடி நடவடிக்கை: கோவை மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர்

வேளாண் மின் இணைப்பு வழங்கக் கால தாமதப்படுத்தினால் உடனடியாக புகார் தெரிவிக்கலாம் என தலைமை பொறியாளர் தெரிவித்துள்ளார். இவ்வாறு பெறப்படும் புகார்கள் உடனடியாக துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.


கோவை: வேளாண் மின் இணைப்பு வழங்கக் கால தாமதப்படுத்தினால் உடனடியாக புகார் தெரிவிக்கலாம் என தலைமை பொறியாளர் தெரிவித்துள்ளார்.

கோவை மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர் டேவிட் ஜெபசிங் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

2021- 22 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் ஒரு லட்சம் வேளாண் மின் இணைப்பு வழங்கும் திட்டத்தில் கோவை திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்கள் உள்ளடக்கிய கோவை மண்டலத்திற்கு 14,557 இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த நிலையில் விண்ணப்பதாரர்கள் மின் இணைப்பு தொடர்பாக மின் வாரிய அலுவலர்களைத் தொடர்பு கொள்ளும் போது தேவையில்லாமல் தாமதப்படுத்தினாலோ அல்லது தவறான எதிர்பார்ப்புடன் விவசாயிகளை அழிப்பு செய்தாலோ தொடர்புடைய மேற்பார்வை பொறியாளர் அல்லது தலைமைப் பொறியாளரிடம் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளிக்கலாம்.

இவ்வாறு பெறப்படும் புகார்கள் உடனடியாக துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...