கோவை இஎஸ்ஐ கார் பார்க்கிங் தளம் கொரோனா வார்டாக மாற்றம்

கோவை இஎஸ்ஐ கார் பார்க்கிங் தளம் கொரோனா வார்டாக மாற்றப்பட்டுள்ளதாகக் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். அப்பகுதி, 250 படுக்கை வசதி கொண்ட கொரோனா மையமாக மாற்றப்பட்டுள்ளது.


கோவை: கோவை இஎஸ்ஐ கார் பார்க்கிங் தளம் கொரோனா வார்டாக மாற்றப்பட்டுள்ளதாகக் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவக்கல்லுாரி கலையரங்க வாகன பார்க்கிங் தளம், கொரோனா வார்டாக மாற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் மூன்றாம் அலை வேகமாகப் பரவி வருகிறது. முதல் மற்றும் இரண்டாம் அலையின்போது, போதிய படுக்கை வசதியில்லாமல், கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்பட்டது.

ஆக்சிஜன் படுக்கைகள் குறைவான எண்ணிக்கையிலிருந்தன. தற்போது இப்பிரச்சினைகளைச் சரி செய்யும் வகையில், கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கை வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இவ்வளாகத்தின் கலையரங்க கீழ் பகுதியில், 20 ஆயிரம் சதுரடி கொண்ட வாகன 'பார்க்கிங்' இடம் உள்ளது. அப்பகுதி, 250 படுக்கை வசதி கொண்ட கொரோனா மையமாக மாற்றப்பட்டுள்ளது. மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் ரவிக்குமார் இவ்வாறு தெரிவித்தார்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...