கோவையில் நாளை ஆசிரியர்களுக்கான விருப்ப இடமாறுதல் கலந்தாய்வு

கோவையில் ஆசிரியர்களுக்கான விருப்ப இடமாறுதல் கலந்தாய்வு ஆன்லைன் மூலமாக நாளை துவங்குகிறது. கலந்தாய்வுக்கு வருகை புரியாமலோ, தாமதமாக வருகை புரிந்தாலோ பங்கேற்க இயலாது என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவையில் ஆசிரியர்களுக்கான விருப்ப இடமாறுதல் கலந்தாய்வு ஆன்லைன் மூலமாக நாளை துவங்குகிறது.

கோவை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில், கணவன் அல்லது மனைவி பணிபுரியும் இடத்துக்கு, விருப்ப மாறுதல் பெற்றுச் செல்ல முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நாளை துவங்குகிறது. கணவன்- மனைவி வெவ்வேறு மாவட்டங்களில் பணிபுரியும் பட்சத்தில், கணவனோ, மனைவியோ யாரேனும் ஒருவர், மற்றொருவர் பணிபுரியும் மாவட்டத்துக்கு மட்டும் மாறுதல் பெற்றுச்செல்ல இயலும்.

மேலும், கணவன்-மனைவி இருவரும் தாங்கள் பணிபுரியும் மாவட்டம் அல்லது வேறு மாவட்டத்துக்கு மாறுதல் பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இம்முன்னுரிமையைக் கணவன் அல்லது மனைவி யாரேனும் ஒருவர் பயன்படுத்திக் கொண்டாலும், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இம்முன்னுரிமையைப் பெற இயலாது என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மாவட்டம் விட்டு மாவட்டம் விண்ணப்பித்தவர்கள், பணிபுரியும் மாவட்டத்துக்குள் பள்ளிகளைத் தேர்வு செய்ய இயலாது. கலந்தாய்வுக்கு வருகை புரியாமலோ, தாமதமாக வருகை புரிந்தாலோ பங்கேற்க இயலாது என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...