தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி பிப்ரவரி 19-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 22-ம் தேதி எண்ணப்படவுள்ளது.
கோவை: வருகிற 19-ந் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும். அதன்படி, இன்றிலிருந்து தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வருகிறது, என மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுவரை, ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் கிராமப்புறங்களில் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் எப்போது நடக்கும் என மக்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில், அதற்கான பல கட்ட ஆய்வுகள் மற்றும் அனைத்து கட்சிக் கூட்டங்கள் கூட்டி, கருத்துக்கள் கேட்கப்பட்டது.
இந்த நிலையில், சற்று நேரத்திற்கு முன்பு தமிழக தேர்தல் ஆணையர் பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து வரும் நகர்புற தேர்தல் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 19 ஆம் நடக்கும். தேர்தலுக்கான வேட்புமனு வரும் ஜனவரி 28-ந் தேதி முதல் வரும் 4-ந் தேதி வரை நடைபெறும்.
பெறப்பட்ட வேட்பு மனுக்கள் பிப்ரவரி 5 ஆம் தேதி பரிசீலனை செய்யப்படும். 7 ஆம் தேதி வேட்பு மனுவை திரும்பப் பெறுவதற்காக கடைசி நாளாகும்.
19-ந் தேதி வாக்குப்பதிவு ஒரே கட்டமாக தமிழகம் முழுவதும் நடைபெறும். 22-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். பின்னர், மார்ச் 4 ஆம் தேதி பதவி ஏற்பு நடைபெறும்", என்று அறிவித்துள்ளார்.
நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான முக்கிய தேதிகள்
ஜனவரி 28 - வேட்பு மனு தாக்கல் துவங்கும் நாள்.
பிப்ரவரி 4 - வேட்புமனு தாக்கல் இறுதி நாள்.
பிப்ரவரி 5 - வேட்பு மனுக்கள் பரிசீலனை
பிப்ரவரி 7 - வேட்பு மனு திரும்ப பெருவதற்கான கடைசி தேதி.
பிப்ரவரி 7 - இறுதி வேட்பாளர் பட்டியல்.
பிப்ரவரி 19 - வாக்கு பதிவு.
பிப்ரவரி 22 - வாக்கு எண்ணிக்கை
பிப்ரவரி 24 - தேர்தல் நிறைவு.
மார்ச் 4 - மறைமுக தேர்தல் நடைபெரும் தேதி.
மார்ச் 2 - பதவியேற்பு
இந்த தேர்தலுக்கு அவர் பல்வேறு விதமான கட்டுப்பாட்டு விதிகளை கூறியுள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பின்பற்ற வேண்டிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
➤அனைவரும் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும்.
➤அதிக கூட்டம் சேர்க்க தடை.
➤அனைத்து அலுவலங்களுக்கு முன்பாக கிருமி நாசினி இருக்க வேண்டும்.
➤விதிளை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை.
➤ வருகிற ஜனவரி 31-ந் தேதி வரை ஆர்ப்பாட்டம், போராட்டங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.
➤அறிகுறி உள்ளவர்கள் மாலை 5 மணி முதல் 6 வரை வாக்களிக்கலாம்.
➤முகவர்கள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்.
➤அனைத்து மாவட்டத்திலும் ஒருங்கிணைப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும்.
➤முடிந்த வரைவில் தேர்தல் அதிகாரிகளுக்கு இணையதளம் மூலம் பயிற்சி அளிக்க வேண்டும்.
➤வீடு வீடாக பிரச்சாரம் செய்ய 3 பேருக்கு மட்டும் அனுமதி.
➤ அனைத்து வாக்குகளும் மின்னணு எந்திரம் மூலம் பெறப்படும்.
➤ 1.33 லட்சம் பேர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
➤ 80 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
➤ பதற்றமான வாக்குச்சாவடிகளில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.