இந்தியாவில் 2025ம் ஆண்டுக்குள் காசநோயை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் மத்திய அரசு சார்பில் தேசிய காசநோய் தடுப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கோவை: கோவை மாவட்டத்தில் 2021ஆம் ஆண்டில் 3,829 போ் காச நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது முந்தைய ஆண்டை விட 9 சதவீதம் அதிகரிப்பு ஆகும்.
இந்தியாவில் 2025ம் ஆண்டுக்குள் காசநோயை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் மத்திய அரசு சார்பில் தேசிய காசநோய் தடுப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் கீழ் காசநோயாளிகளை விரைந்து கண்டறிந்து கூட்டு மருந்து சிகிச்சை அளித்தல், பொது மக்களின் குடியிருப்புப் பகுதிகளுக்கே நேரடியாக சென்று பாதிப்பை கண்டறிதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
காச நோய் கண்டறியப்படும் நோயாளிகளுக்கு முதல் 6 மாதம் ஐசோனைஸ்டு, ரிபாம்பிசின், ப்ளூரோகுயினோலான் ஆகிய 3 மருந்துகள் அடங்கிய கூட்டு மருந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த 6 மாத காலத்துக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித்தொகை அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், கோவை மாவட்டத்தில் முந்தைய ஆண்டுகளில் குறைந்திருந்த காசநோய் பாதிப்பு கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு உள்பட பல்வேறு காரணங்களால் கடந்தாண்டு அதிகரித்துள்ளது.
இது தொடா்பாக காசநோய் தடுப்புத் திட்ட அதிகாரிகள் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் காச நோய்த் தடுப்புத் திட்ட கள அலுவலா்கள் மூலமும், எக்ஸ்ரே வாகனங்கள் மூலமும் குடியிருப்புப் பகுதிகளுக்கே சென்று காசநோய் பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது.
கோவையில் கடந்த 2020ம் ஆண்டில் 3,497 பேருக்கு காசநோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. ஆனால், 2021ஆம் ஆண்டு 3,829 பாதிக்கப்பட்டனா். இது முந்தைய ஆண்டை விட 9 சதவீதம் அதிகம் ஆகும்.
கொரோனா 2வது அலையின்போது தடுப்பு நடவடிக்கைகள், விழிப்புணா்வு பணிகளை முழுமையாக மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் காச நோயால் பாதிக்கப்பட்டவா்கள் தங்களை தற்காத்துக் கொள்ள முடியாமல் அவா்கள் மூலம் கூடுதலான நபா்களுக்கு பரவியிருக்க வாய்ப்புள்ளது.
இந்நிலையில், நடப்பு ஆண்டு காசநோய்த் தடுப்புப் பணிகளை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளோம். 2025ம் ஆண்டுக்குள் காசநோயை முற்றிலுமாக கட்டுப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகள் படி தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றனா்.