கோவை தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ 73வது குடியரசு தினவிழா நிகழ்ச்சி..!

இந்நிகழ்ச்சியில் கோவிட்‌-19 சூழ்நிலையில்‌ மற்ற அனைத்து தொழில்களும்‌ முடங்கிய போதும்‌ வேளாண்‌ தொழிலின்‌ வளர்ச்சி பற்றி செயல் துணைவேந்தர் எடுத்துரைத்தார்.


கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ 73வது குடியரசு தினவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகத்தில்‌ 73வது குடியரசு தினவிழா இன்று (26-01-2022) சிறப்பாகக்‌ கொண்டாடப்பட்டது.



பல்கலைக்கழகத்தின்‌ செயல்‌ துணைவேந்தரும்‌, பதிவாளருமான, முனைவர்‌ அ.சு. கிருட்டிண மூர்த்தி அவர்கள்‌ தேசியக்‌ கொடி ஏற்றி குடியரசு தினவிழாவில்‌ உரையாற்றினார்‌.



நமது இந்திய தேசத்தின்‌ தலைவர்களின்‌ தியாகங்களை செயல்‌ துணைவேந்தர்‌ தமது உரையில்‌ நினைவு கூர்ந்தார்‌. வேளாண்மையின்‌ முக்கியத்துவத்தையும்‌ அவற்றில்‌ உள்ள லாபத்தை பற்றியும்‌ தனது உரையில்‌ குறிப்பிட்டார்‌. இதற்கு முக்கிய காரணியாக உள்ள விவசாயிகளின்‌ உழைப்பின்‌ முக்கியத்துவம்‌ பற்றி எடுத்துரைத்தார்‌.

தற்போதுள்ள கோவிட்‌-19 சூழ்நிலையில்‌ மற்ற அனைத்து தொழில்களும்‌ முடங்கிய போதும்‌ வேளாண்‌ தொழிலின்‌ வளர்ச்சி பாராட்டுக்குரியது. விவசாய சமூகத்தின்‌ நெருக்கடிகளை எதிர்கொள்வதன்‌ மூலம்‌ 2020-27 ஆம்‌ ஆண்டில் நிலையான விலையில்‌ 3.4 சதவிகிதம்‌ சாதகமான வளர்ச்சியைப்‌ பெற்ற ஒரே துறையாக விவசாயத்தை உருவாக்கியது.

மேலும், 2019-20 ஆம்‌ ஆண்டில்‌ 17.8 சதவீதமாக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியில்‌ விவசாயத்தின்‌ பங்கு 2020-21 ஆம்‌ ஆண்டில்‌ 19.9 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த 2003-04 ஆம்‌ ஆண்டில்‌ மொத்த உள்நாட்டு உற்பத்தியில்‌ விவசாயத்‌ துறையின்‌ பங்களிப்பு 20 சதவீதமாக இருந்தது.

தொற்றுநோய்க்கு மத்தியிலும்‌, விவசாயத்‌ துறை அதன்‌ சாதனையை எட்டியது. இந்த சாதனையை வேளாண் பெருமக்களின்‌ மகத்தான பங்களிப்பாலும்‌, வேளாண்‌ விஞ்ஞானிகளின்‌ தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால்‌ சாத்தியமாயிற்று என்று கூறினார்‌.



அகில இந்திய அளவில்‌ தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்‌ பசுமை மற்றும்‌ தூய்மை வளாக விருது, முதுநிலை பட்டப்படிப்பு ஊக்கத்‌ தொகை விருது பெற்றமைக்கு வேளாண்‌ விஞ்ஞானிகள்‌ மற்றும்‌ மாணவர்களின்‌ உழைப்பை பாராட்டினார்‌.

தாவர நோயியல்‌ துறையில் 2 M.Sc மற்றும் 3 Ph.D. உள்ளடக்கிய ஐந்து மாணவர்கள்‌ புதுதில்லியின்‌ இந்தோ- கனடியன்‌ சாஸ்திரி இன்ஸ்டிடியூட் நிதியுதவியுடன் MITACS திட்டத்தின்‌ கீழ்‌ தேர்ந்தெடுக்கப்பட்டனர்‌. நானோ தொழில்நுட்பத்தில்‌ மதிப்புமிக்க பாரத பிரதமரின்‌ கல்வி உதவித்தொகை இரண்டு மாணவர்கள்‌ பெற்றுள்ளனர்.

2020 ஆம்‌ ஆண்டு நடத்தப்பட்ட ICAR JRF தேர்வில்‌, பல்கலைக்கழக மாணவர்களில்‌ 69 பேர்‌ கல்வி உதவித்தொகையை பெற்றனர்‌. மேலும்‌, இந்திய வேளாண் ஆராய்ச்சிக்‌ கழகத்தின்‌ தரவரிசையில் பல்கலைக்கழகம்‌ எட்டாவது இடத்தைத்‌ தக்கவைத்து, தென்னிந்தியாவின் இரண்டாவது சிறந்த மாநில வேளாண்‌ பலகலைக்கழகமாகத்‌ திகழ்ந்ததை பற்றியும்‌ அவர்‌ குறிப்பிட்டார்‌.

இந்நிகழ்ச்சியில்‌, பல்கலைக்கழகத்தின்‌ உயர்‌ அதிகாரிகள்‌, பேராசிரியர்கள், மற்றும்‌ அனைத்து தொழிலாளர்களும்‌ கலந்து கொண்டார்கள்‌. இந்த முழு நிகழ்ச்சியானது முதன்மையர்‌ (மாணவர்கள்‌ நலன்‌), தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்‌ கழகம்‌, கோயம்புத்தூர்‌ மூலம்‌ ஏற்பாடு செய்யப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டது.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...