கோவை குடியரசு தின நிகழ்ச்சிகளை ஆட்சியரின் முகநூல் பக்கத்தில் நேரலையாக காணலாம்

கொரோனா பரவல் காரணமாக, நாளை நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகளை பொதுமக்கள் அவரவர் வீட்டில் இருந்தபடியே காண வசதியாக, கோவை மாவட்ட ஆட்சியரின் முகநூல் பக்கத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.


கோவை: குடியரசு தினத்தினை முன்னிட்டு நாளை கோவை வ.உ.சி மைதானத்தில் நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில், காலை 08.05 மணிக்கு மாவட்ட கலெக்டர் ஜி.எஸ். சமீரன் தேசியக் கொடியினை ஏற்றிவைத்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்ள உள்ளார்.

நாளைய விழாவில், கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள், மருத்துவர்கள், முன் களப் பணியாளர்களுக்கு நற்சான்றிதழ்களை தொடர்புடைய துறை தலைமை அலுவலர்களிடம் வழங்கி ஆட்சியர் சிறப்பிக்க உள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக, சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களை கௌரவிக்கும் பொருட்டு அவரவர் வீட்டிலேயே சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் மற்றும் துணை வட்டாட்சியர் நிலையில் உள்ள அலுவலர்கள் பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்கள்.

இந்த ஆண்டு பள்ளி, கல்லூரி மாணவ - மாணவியர்கள் நிகழ்த்தும் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், கோவை மாவட்ட ஆட்சியரின் முகநூல் பக்கத்தில் வ.உ.சி மைதானத்தில் நடைபெறவுள்ள குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

எனவே, குடியரசு தின விழா நிகழ்ச்சியினை பொதுமக்கள் வீட்டிலிருந்தே காணலாம் என கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராம சபை கூட்டம் ரத்து

கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலை காரணமாக, குடியரசு தினம் அன்று கிராமங்களில் வழக்கமாக நடைபெறும் கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இதில், 227 ஊராட்சிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...