ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் கடும் கண்டனம்

கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களின் ஒப்பந்தங்கள் குறித்து அமைச்சர்கள் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் போடப்பட்ட ஒப்பந்தங்களை ஜவுளி உற்பத்தியாளர்கள் மீறுவதற்குக் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


கோவை: கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களின் ஒப்பந்தங்கள் குறித்து அமைச்சர்கள் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் போடப்பட்ட ஒப்பந்தங்களை ஜவுளி உற்பத்தியாளர்கள் மீறுவதற்குக் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களின் பிரச்சனைகளைத் தமிழக அரசு கவனத்தில் கொள்ள வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை, திருப்பூர் மாவட்ட குழுக்களின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சோமனூரில் செவ்வாயன்று நடைபெற்றது.



சோமனூர் மின்வாரிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் சம்மேளன தலைவர் முத்துசாமி தலைமை தாங்கினார்.

இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.காமராஜ், சிஐடியு கோவை மாவட்ட தலைவர் சி.பத்பநாபன், செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினார்.

முன்னதாக பி.ஆர்.நடராஜன் எம்பி செய்தியாளர்களிடம் பேசுகையில்:-

தமிழக அமைச்சர்கள் மற்றும் கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர்கள் முன்னிலையில் ஏற்படுத்திய கூலி உயர்வு தொடர்பான ஒப்பந்தத்தை ஜவுளி உற்பத்தியாளர்கள் நடைமுறைப்படுத்தாமல் இருப்பதை ஏற்க முடியாது.

முதலாளிகளின் இச்செயலைக் கண்டிப்பதுடன், கூலி உயர்வு வழங்க முதலாளிகளைத் தமிழக அரசு நிர்ப்பந்திக்க வேண்டும். கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு மாநில அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட வேண்டும்.

இந்த ஒப்பந்தத்தில் சட்ட ரீதியிலான உரிமை இல்லை எனவும் சட்ட உரிமையை ஏற்படுத்த மாநில அரசாங்கத்திடம் தெரிவிப்பதாகத் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதனை ஏற்கமுடியாது. தங்களது முன்னிலையில் போடப்பட்ட ஒப்பந்தம் மீறப்படுகிறது என்ற உணர்வோடு தமிழக அமைச்சர்கள் இந்த விவகாரத்தைக் கையில் எடுக்க வேண்டும்.

மாநில அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் முன்னிலையில் போடப்பட்ட ஒப்பந்தம் மீறப்படும்போது மாநில அரசு தலையிட வேண்டும். மாறாகத் தொழிற்சங்கம் மற்றும் விசைத்தறி தொழிலாளர் சங்கத் தலைவர்களை ஏதோ ஒரு காரணத்துக்காக காவல்துறையைக் கொண்டு நிர்பந்த படுத்துகிற ஏற்பாட்டை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க மாட்டோம்.

மாநில அரசு சட்டம் ஒழுங்கு நிலையைக் கணக்கில் எடுத்துக் கொண்டு இந்த பிரச்சனையை ஒரு வாரத்திற்குள் தீர்வை ஏற்படுத்த வேண்டும். மாநில அரசு ஏற்கனவே கொடுத்திருக்கும் வாக்குறுதியின்படி சோமனூர் பகுதியில் ஜவுளிப் பூங்காவை ஏற்படுத்த வேண்டும் என்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...