நாளை கோவை வ.உ.சி மைதானத்தில் நடைபெறக்கூடிய குடியரசு தின விழா அணிவகுப்பு மரியாதை முடிந்தபிறகு, சிறப்பாக பணிபுரிந்த கோவை சிபிசிஐடி, டிஎஸ்பி முரளிதரன் உட்பட காவல் அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பதக்கங்களை வழங்கி கவுரவிக்க உள்ளார்.
கோவை: நாளை நாடு முழுவதும் 73 ஆவது குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாப்பட உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், கோவை மட்டும் நீலகிரியில் நாளை நடைபெறக்கூடிய குடியரசு தின விழாவிற்கு பொதுமக்களுக்கு அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் மூலமாக நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்மூலமாக, பொதுமக்கள் நிகழ்ச்சிகளை பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை குடியரசு தின நிகழ்ச்சியில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், மூவர்ண கொடியை ஏற்றி, காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்வார்கள். அதேபோல், அன்றைய தினம் காவல் துறை மற்றும் பல்வேறு துறைகளில் சிறப்பாக மக்கள் சேவை ஆற்றியோருக்கு பதக்கங்கள் வழங்கப்படும்.
அதன்படி, கோவை சிபிசிஐடி, டிஎஸ்பி முரளிதரன் அவர்களுக்கு சிறந்த சேவைக்கான பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை கோவை வ.உ.சி மைதானத்தில் நடைபெறக்கூடிய குடியரசு தின விழா அணிவகுப்பு மரியாதை முடிந்தபிறகு, சிறப்பாக பணிபுரிந்த கோவை சிபிசிஐடி, டிஎஸ்பி முரளிதரன் உட்பட காவல் அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் சமீரன் போலீஸ் பதக்கங்களை வழங்கி கவுரவிக்க உள்ளார்.