73-வது குடியரசு தினம்: கோவை மேற்கு மண்டல ஐஜி சுதாகருக்கு ஜனாதிபதி பதக்கம் அறிவிப்பு; காவல்துறையினர், பொதுமக்கள் பாராட்டு

நாளை நடைபெறவுள்ள 73-வது குடியரசு தினத்தையொட்டி காவல்துறையில் சிறந்த சேவையாற்றிய மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை பதக்கம் வழங்கவுள்ளார்.



கோவை: ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று சிறந்த பணிக்கான பதக்கங்கள், மாநில காவல்துறையினருக்கு, மத்திய ஆயுதப்படை வீரர்கள் மற்றும் ரயில்வே காவல் அதிகாரிகளுக்கு வழங்கப்படுவது வழக்கம்.

அதன்படி, நாளை நடைபெறவுள்ள 73 வது குடியரசு தினத்தையொட்டி காவல்துறையில் சிறந்த சேவையாற்றிய மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகருக்கு ஜனாதிபதி பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாளை 73-வது குடியரசு தின விழா இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அதற்கு வேண்டிய பிரம்மாண்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதிலும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் நடைபெற்று வருகிறது. நாளை கொடி ஏற்றிவைத்து சிறந்த சேவையாற்றிய பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகளுக்கு அந்தந்த மாநில முதலமைச்சர் விருதுகளை வழங்குவார். 

இந்த நிலையில், தமிழக காவல்துறையில் சிறந்த சேவையாற்றிய விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. 

அதன்படி, கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் உட்பட திருச்சி ஐ.ஜி மற்றும் கேரள மாநிலம், கொச்சின் ஆணையருக்கு என மூவருக்கு ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. 

உயரிய விருதான ஜனாதிபதி விருதுக்கு தேர்வாகியுள்ள ஐ.ஜி. சுதாகர் அவர்களுக்கு காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். 

கடந்த ஆண்டு ஜூன் 20 ஆம் தேதி, கோவை மேற்கு மண்டல காவல் துறை ஐ.ஜி.யாக பணிபுரிந்த, அமல்ராஜ் கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு பெற்று சென்னைக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக மதுரை சரக டி.ஐ.ஜி.யாக பணிபுரிந்து வந்த ஆர்.சுதாகர், பதவி உயர்வு அளிக்கப்பட்டு, கோவை மேற்கு மண்டல ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...