கோவையில் உள்ள தேவாலயத்தில் செபஸ்தியர் சிலை சேதம்: ஆலய நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம்

கோவையில் உள்ள தேவாலயத்தில் செபஸ்தியர் சிலையை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பாக, ஆலய நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கோவையில் உள்ள தேவாலயத்தில் செபஸ்தியர் சிலையை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பாக, ஆலய நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள டிரினிட்டி தேவாலய வாயிலில் உள்ள செபஸ்தியர் சிலையை நேற்று முன் தினம் இரவு இரு சக்கர வாகனத்தில் வந்த நபர்கள் சேதப்படுத்திச் சென்றனர்.



இச்சம்பவம் குறித்து ராமநாதபுரம் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், ஆலய நிர்வாகிகள், மற்றும் ஆலயத்தில் பணிபுரிவோர் இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி ஆலயத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இச்சம்பவத்தைக் கண்டித்தும் இதில் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் பதாகைகளை ஏந்தி கண்டனங்களைத் தெரிவித்தனர்.



கிறிஸ்துவ மக்களிடையே இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு கட்சியினரும் அமைப்புகளும் ஆலயத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகின்றனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...