அரியலூர் மாணவி தற்கொலை சம்பவம்: நீதி வேண்டி, கோவையில் இந்து முன்னணியினர் கண்களை கட்டி, தீபம் ஏந்தி போராட்டம்

மாவட்ட தலைவர் தசரதன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், வரிசையாக நின்று கையில் தீபம் ஏந்தியும் கண்டன பதாகைகளை ஏந்தியும், கண்ணில் கருப்பு துணி கட்டி கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.



கோவை: அரியலூர் மாவட்டத்தில் பள்ளியில் தன்னை கிறிஸ்தவ மதத்திற்கு மாற கட்டாயப்படுத்தியதாகவும் தன்னை துன்புறுத்தியதாகவும் கூறி பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடைபெற்று வரும் நிலையில், மாணவியை மதமாறத்திற்கு கட்டாயப்படுத்திய பள்ளியின் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும், இந்த வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டியும் பல்வேறு இந்து அமைப்புகள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக இன்று மாலை கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள சித்தி விநாயகர் கோவில் முன்பு இந்து முன்னனியின், அன்னையர் முன்னணி அமைப்பினர் மாணவியின் உயிரிழப்பிற்கு நீதி கேட்டும் இந்த வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டியும் தீபம் ஏந்தி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.



மாவட்ட தலைவர் தசரதன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பெண்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வரிசையாக கையில் தீபம் ஏந்தியும் கண்டன பதாகைகளை ஏந்தியும், கண்ணில் கருப்பு துணி கட்டி கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பி நூதன ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.



Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...