செபஸ்தியர் சிலை உடைப்பு: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் ஆய்வு

கோவையில் உள்ள தேவாலயத்தில் செபஸ்தியர் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்திய சம்பவம் தொடர்பாக, முன்னாள் அமைச்சரும், அதிமுக கொரடாவுமான எஸ்.பி. வேலுமணி நேரில் பார்வையிட்டார்.


கோவை: கோவையில் உள்ள தேவாலயத்தில் செபஸ்தியர் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்திய சம்பவம் தொடர்பாக, முன்னாள் அமைச்சரும், அதிமுக கொரடாவுமான எஸ்.பி. வேலுமணி நேரில் பார்வையிட்டார்.

கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள டிரினிட்டி தேவாலயத்தின் வாயிலில் உள்ள செபஸ்தியர் சிலையை இரு சக்கர வாகனத்தில் வந்த நபர்கள் சேதப்படுத்திச் சென்றனர். சம்பவம் குறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை ராமநாதபுரம் சிக்னல் அருகே டிரினிட்டி தேவாலயம் மற்றும் பள்ளி அமைந்துள்ளது. இந்த தேவாலயத்தின் வாயிலில் புனித செபஸ்தியர் சிலை வைக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இரவு இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் செபஸ்தியர் சிலையைச் சேதப்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.



தற்பொழுது அதிமுக கொரடா எஸ்.பி.வேலுமணி நேரில் பார்வையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவதாகத் தெரிவித்தார்.



மேலும், இந்த நிகழ்வின்போது மாநகர் மாவட்டச் செயலாளரும் வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் கே.அர்ஜுனன், கழக அமைப்புச் செயலாளரும் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினருமான தாமோதரன் மற்றும் சூலூர் சட்டமன்ற உறுப்பினருமான வி.பி.கந்தசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...