வால்பாறை அருகே ஐயர்பாடி எஸ்டேட் பகுதியில் வீட்டை இடித்து சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானை..!

காட்டு யானை வீட்டை இடித்து சேதப்படுத்தியதை அறிந்த வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி அப்பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.


கோவை: கோவை வால்பாறை அருகே ஐயர்பாடி எஸ்டேட் பகுதியில் ஒற்றை காட்டு யானை வீட்டை இடித்து சேதப்படுத்தியதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகள் குடியிருப்பு பகுதியில் நுழைந்து வீடுகளை சேதப்படுத்தி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று இரவு வால்பாறை அருகே அய்யர் பாடி எஸ்டேட் பகுதியில் அசாம் தொழிலாளர்கள் குடியிருக்கும் குடியிருப்பு பகுதியில் சையது அலி என்பவரின் வீட்டை ஒற்றை காட்டு யானை வீட்டை இடித்து சேதப்படுத்தியது.



இதில் சுவரின் கற்கள் வீட்டிலிருந்த சையது அலி மற்றும் பெரிதா பேகம் அவர்களின் மீது விழுந்ததால் லேசான காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.



இந்நிலையில், யானை இடித்து சேதப்படுத்தியதை அறிந்த வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி அப்பகுதிக்கு வந்து பார்வையிட்டு வீடுகளை சரி செய்து தரவும், தெரு விளக்கு அமைக்க நகராட்சி மூலம் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.



மேலும், யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் வனத்துறையினர் பாதுகாப்பு தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...