வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு 425 ரூபாய் 40 காசு சம்பளம் வழங்க கோரி தொழிற்சங்கங்கள் உண்ணாவிரத ஆர்ப்பாட்டம்..!

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சம்பள பேச்சுவார்த்தை நடத்தி எஸ்டேட் நிர்வாகமும், தொழிற்சங்க கூட்டமைப்பினரும் இந்த சம்பளத்தை முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.


கோவை: கோவை வால்பாறையில் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு 425 ரூபாய் 40 காசு சம்பளம் எஸ்டேட் நிர்வாகம் வழங்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் கண்டன உண்ணாவிரத ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் சுமார் 62 எஸ்டேட்கள் உள்ளன. இவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக தற்போது 350 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. நான்கு ஆண்டுக்கு ஒருமுறை விலைவாசி அடிப்படையில் சம்பள உயர்வு வழங்க வேண்டும்.

இந்நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சம்பளம் பேச்சுவார்த்தை நடத்தி எஸ்டேட் நிர்வாகமும், தொழிற்சங்க கூட்டமைப்பினரும் சம்பளப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அரசாங்கம் 425 ரூபாய் 40 காசு குறைந்தபட்ச ஊதியமாக வழங்க வேண்டும் என்று அறிவித்தது.



இதையடுத்து, அதை தற்போது எஸ்டேட் நிர்வாகம் வழங்காமல் இருப்பதாகவும், எஸ்டேட் நிர்வாகம் சில தொழிற்சங்க தலைவர்களும் இணைந்து எஸ்டேட் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் 425 ரூபாய் 40 காசு வழங்க முடியாது என்றும் தெரிவித்து வருகின்றனர் என்றும் கூறி தமிழக அரசு அறிவித்த 425 ரூபாய் 40 காசு குறைந்தபட்ச சம்பளத்தை எஸ்டேட் நிர்வாகம் வழங்க வேண்டுமென்று தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் பாதுகாப்பு தொழிற்சங்கம் கூட்டமைப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்த உண்ணாவிரதப் போராட்டம் மதிமுக ஒன்றிய செயலாளர் கல்யாணி தலைமையில் நடைபெற்றது. இதில் ஐஎன்டியூசி பொதுச் செயலாளர், சிஐடியு தொழிற்சங்கம், தீரன் தொழிற்சங்கம், மனிதநேய தொழிற்சங்கம், புதிய தமிழகம் தொழிற்சங்கம் போன்ற தொழிற் சங்கங்கள் இணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...