மொழிப்போர் தினம்: இந்தி எதிர்ப்பு நிலைப்பாட்டில் அதிமுக உறுதியாக உள்ளது - முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி..!

இதயதெய்வம் மாளிகையில் தமிழ் மொழிக்காக உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.



கோவை: மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க தினத்தை முன்னிட்டு கோவை அதிமுக அலுவலகமான இதயதெய்வம் மாளிகையில் தமிழ் மொழிக்காக உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.



முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் கே.அர்ஜுனன், அருண்குமார், சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டு, தியாகிகள் நடராசன், தாளமுத்து உட்பட 12 தியாகிகளின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.



பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எஸ்.பி.வேலுமணி கூறுகையில், அதிமுக, தமிழ் மொழிக்காக உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு எப்போதும் அஞ்சலி செலுத்தி உரிய மரியாதை வழங்கி வருவதாக தெரிவித்தார்.



மேலும் இந்த மொழி போரில் கோவை மாவட்டம் முக்கிய பங்காற்றி இருப்பதாகவும் பொள்ளாச்சி உட்பட பல பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் பல்வேறு போராட்டங்களை அண்ணா நடத்தியதால் திமுக ஆட்சி அமைந்ததாக தெரிவித்த அவர், அதனை தொடர்ந்து அதிமுக வீர மறவர்களுக்கு இப்போது வரை அஞ்சலி செலுத்தி வருவதாக கூறினார். தற்போது வரையிலும் அதிமுக இந்தி எதிர்ப்பு நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து பேட்டியளித்த கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் அருண்குமார், வீரபாண்டி பேரூராட்சித் தலைவர் ஜெயராமன் வீட்டில் அவரை களங்கப் படுத்த வேண்டும் என்பதற்காகவே தற்போது பொறுப்பிலுள்ள அமைச்சரின் தூண்டுதலின் பெயரில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியுள்ளதாகவும், நடைபெறவுள்ள தேர்தலில் அதிமுக வெற்றியை பாதிக்கவும் தேர்தல் பணிகளை முடிக்க வேண்டும் என்பதற்காகவே சோதனை நடத்தி உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், முன்னாள் அமைச்சரின் வீடுகளில் இருந்து தற்பொழுது ஒன்றிய செயலாளர் வரை திமுக சோதனை நடத்தி வருவதாகவும் இதனை சட்டரீதியாக எதிர்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...