கோவையில் கிறிஸ்தவ தேவாலயத்தில் செபஸ்தியர் சிலையை சேதப்படுத்தியதற்கு தமுமுக கண்டனம்..!

தமிழக அரசு கோவையில் கூடுதல் கவனம் செலுத்தி முளையிலேயே இதுபோன்ற பிரச்சனைகளை கிள்ளி எறிய வேண்டும் என்று வலியுறுத்தினர்.


கோவை: கோவையில் கிறிஸ்தவ தேவாலயத்தில் செபஸ்தியர் சிலையை சேதப்படுத்தியதற்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கோவை ராமநாதபுரத்தில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மர்மநபர்கள் சிலையை சேதப்படுத்தி இருப்பது இந்திய ஜனநாயகத்திற்கு எதிரான செயலாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கருதுகிறது.

இந்திய இறையாண்மைக்கு எதிராக சில சந்தர்ப்பவாத சமூக விரோதிகள் வட இந்தியாவில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்துவது போல் தென்னிந்தியாவில் குறிப்பாக அமைதிப் பூங்காவாக விளங்கிக் கொண்டிருக்கின்ற தமிழகத்தில் மதநல்லிணக்கத்தை பேணிப் பாதுகாக்கின்ற கோவையில் இதுபோன்ற அசம்பாவிதங்களை ஏற்படுத்தி அதன்மூலம் சுய லாபம் அடைய திட்டமிடுகிறார்கள்.

சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்கள் தாக்குவது, சிலைகளை சேதப்படுத்துவது, முற்போக்கு சிந்தனை வாதிகளின் சிலைகளை சேதப்படுத்துவது என தொடர்ந்து கோவையில் அசம்பாவிதங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்ற கயவர்களை கண்டறிந்து அவர்களை சட்டத்திற்கு முன் நிற்க வைத்து தக்க தண்டனையை உறுதி செய்ய வேண்டும் என்று இந்த நேரத்தில் காவல்துறையை கேட்டுக்கொள்கிறோம்.

தமிழக அரசு கோவையில் கூடுதல் கவனம் செலுத்தி முளையிலேயே இதுபோன்ற பிரச்சனைகளை கிள்ளி எறிய வேண்டும் என்றும் இந்த நேரத்தில் கேட்டுக்கொள்கிறோம்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...