வால்பாறை மலைவாழ் கிராம மக்களுக்கு பழங்குடியின அறிவு- சார்‌ மேம்பாட்டிற்கான விழிப்புணர்வு முகாம்..!

மலைவாழ்‌ மக்களுக்கு அறிவுத் திறன்‌ மேம்படுத்துதல்‌ பற்றியும்‌ மற்றும்‌ மலைவாழ்‌ மக்களுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு எதிரான உறுதிமொழி பற்றி தீர்மானிக்கப்பட்டது.


கோவை: கோவை வால்பாறை மலைவாழ் கிராம மக்களுக்கு பழங்குடியின அறிவு- சார்‌ மேம்பாட்டிற்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

கோவை ஆனைமலை புலிகள்‌ காப்பகம்‌, கள இயக்குநர்‌ திரு. எஸ்‌. ராமசுப்பிரமணியம்‌ மற்றும்‌ துணை இயக்குநர்‌ எம்‌.ஜி. கணேசன்‌ அவர்களது அனுமதியின்‌ படி, உலாந்தி வனச்சரகத்திற்கு உட்பட்ட கூமாட்டி மலைவாழ்‌ கிராம மக்கள்‌ மற்றும்‌ மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட பாலகனார்‌ மலைவாழ்‌ மக்கள்‌ கிராமத்தில்‌ உள்ள மக்களுக்கு பழங்குடியின அறிவு- சார்‌ மேம்பாட்டிற்கான விழிப்புணர்வு முகாம்‌ 21.01.2022 மற்றும்‌ 22.01.2022 ஆகிய நாட்களில்‌ நடைபெற்றது.

இவ்விழிப்புணர்வு முகாமில்‌ கரும்பு இனப்பெருக்க முதன்மை விஞ்ஞானி மற்றும்‌ 510 திட்ட ஒருங்கிணைப்பாளர்‌, முனைவர்‌. து. புத்திர பிரதாப்‌, முனைவர். கி.மோகனராஜ்‌ ICAR-SBI-STC குழு வனப்பணியாளர்கள்‌ ஆகியோர்களுடன்‌ மேற்கொள்ளப்பட்டது.



மேற்படி, விழிப்புணர்வு முகாமில்‌ மலைவாழ்‌ மக்களுக்கு அறிவுத் திறன்‌ மேம்படுத்துதல்‌ பற்றியும்‌ மற்றும்‌ மலைவாழ்‌ மக்களுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு எதிரான உறுதிமொழி எடுப்பது பற்றியும்‌ தீர்மானிக்கப்பட்டது.

மலைவாழ்‌ மக்கள்‌ அனைவருக்கும்‌ இயற்கையாக விளைவிக்கப்பட்ட கரும்புகள்‌ மூலம்‌ தயார்‌ செய்யப்பட்ட ஊட்டச்சத்து பானம்‌ வழங்கப்பட்டது.



விவசாய வித்துக்கள்‌ அனைவருக்கும்‌ வழங்கப்பட்டு விவசாயம்‌ செய்து தங்களது குடும்பங்களுக்குத் தேவையான காய்கறிகளை உற்பத்தி செய்துகொள்ள அறிவுரை வழங்கப்பட்டது.



மலைவாழ்‌ மக்கள்‌ விவசாயம்‌ செய்ய தேவையான மண்வெட்டி, கோடாரி போன்ற பொருட்கள்‌, பாக்குமர கன்றுகள்‌ மற்றும்‌ வெளிப்புற தகவல்களை அறிந்து கொள்ளும்‌ பொருட்டு வானொலிப்பெட்டி மற்றும்‌ மலைவாழ்‌ மக்கள்‌ பயன்பாட்டிற்குத் தேவையான அத்தியாவசியப்‌ பொருட்கள்‌ என மொத்தம்‌ 30 வகையான பொருட்கள்‌ வழங்கப்பட்டது.



மலைவாழ்‌ மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

மேலும், மலைவாழ்‌ மக்கள்‌ குடியிருப்புப்‌ பகுதியில்‌ நூலகம்‌ அமைப்பதற்கான நடவடிக்கையும்‌ மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை அன்புடன்‌ தெரிவித்துக்‌ கொள்வதாக வனச்சரகர் ஆ. மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...