கோவை மாவட்டத்தில் கொரோனா விதிமீறியதாக ஒரே நாளில் ரூ.95,200 அபராதம் விதிப்பு..!

இதில், முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.57 ஆயிரத்து 600 மற்றும் கொரோனா விதிமுறைகளை மீறிய கடைகளுக்கு ரூ.37 ஆயிரத்து 600 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது


கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா விதிமீறியதாக ஒரே நாளில் ரூ.95,200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

ஆனால், அதனையும் மீறி மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. மக்கள் கூட்டம் அதிகரிப்பு மற்றும் கொரோனா விதிமுறைகள் கடைபிடிப்பு உள்ளிட்டவற்றை கண்காணிக்க மாநகராட்சி சார்பில் 20 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுதவிர வருவாய் துறை, காவல்துறை என பல்வேறு துறை அதிகாரிகள் தலைமையில் கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள் முகக்கவசம் அணியாதவர்கள் மற்றும் கொரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றாத கடைகளுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கோவையில் உள்ள ஜவுளிக்கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும். மக்கள் முக கவசம் அணிய வேண்டும்.

சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். இதனை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இன்று ஒரே நாளில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.95 ஆயிரத்து 200 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

இதில், முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.57 ஆயிரத்து 600 மற்றும் கொரோனா விதிமுறைகளை மீறிய கடைகளுக்கு ரூ.37 ஆயிரத்து 600 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...