திருப்பூரில் சொத்திற்கு பாதுகாப்பு வழங்கக்கோரி தொழில் அதிபர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் ராதாகிருஷ்ணன் திருப்பூர் வீரபாண்டி பகுதியில் 3.38 ஏக்கர் நிலத்திற்கு பாதுகாப்பு வழங்கக் கோரி மனு அளித்தார்.


திருப்பூர்: திருப்பூரில் தனது சொத்திற்கும், தனக்கும் பாதுகாப்பு வழங்கக்கோரி சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தார்.

சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் ராதாகிருஷ்ணன் என்பவர் திருப்பூர் வீரபாண்டி பகுதியில் 3.38 ஏக்கர் நிலத்தை 2021ம் ஆண்டு கிரையம் செய்து பட்டா மாற்றம் செய்துள்ளார்.

இவரது காலியிடம் அருகே உள்ள மனைப் பிரிவில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக 23 குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.



இந்நிலையில், இவரது காலியிடம் இந்த மனைப்பிரிவில் இருந்து கொடுக்கப்பட்டதாக சிலர் அவதூறு பரப்பி வருவதாகவும், மனைப் பிரிவை சேர்ந்த நபர்களை தனக்கு எதிராக தூண்டி விட்டு தனது சொத்தை அபகரிக்க நினைத்து தன் மீது தவறான பொய் புகார் அளிக்கப்படுவதாகவும், தனது காலியிடமும் குறிப்பிட்ட மனைப் பிரிவும் தனித் தனி இடம் எனவும் தனக்கும் தனது சொத்திற்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் ராதாகிருஷ்ணன் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தார்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...