அரியலூர் மாவட்டத்தில் மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதாக பள்ளி மாணவி தற்கொலை விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி கோவையில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

இன்று கோவை கணபதி அடுத்த சின்னியம்பாளையம் பகுதியில், இந்து முன்னணி அமைப்பினர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் மாணவியின் தற்கொலைக்கு சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறி நீதி கேட்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: அரியலூர் மாவட்டத்தில் மூன்று தினங்களுக்கு முன்பு தனியார் பள்ளியில் பயின்று வந்த மாணவி ஒருவர் தான், பள்ளியில் கிறிஸ்தவ மதத்திற்கு மாற தன்னை வற்புறுத்தியதாக கூறி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சமந்தப்பட்ட பள்ளியின் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும், என்று இந்து அமைப்புகள் பல்வேறு ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை மேற்கொண்டும், சமூக வலைத்தளங்களிலும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.



இந்நிலையில், இன்று கோவை கணபதி அடுத்த சின்னியம்பாளையம் பகுதியில், இந்து முன்னணி அமைப்பினர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் மாணவியின் தற்கொலைக்கு சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறி நீதி கேட்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், அப்பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சிபிஐ விசாரணை வேண்டும் எனவும் முழக்கங்களை எழுப்பினர்.



மேலும், இதனை வலியுறுத்தி கோவையில் பல்வேறு இடங்களில் பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டங்களை இன்று மேற்கொண்டனர்.

பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் மாணவி தற்கொலை வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டும் என இரு தினங்களுக்கு முன்பு கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...