வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வீரபாண்டி பேரூராட்சியின் முன்னாள் தலைவர் ஜெயராமன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை..!

ஜெயராமனின் இல்லத்திற்கு வெளியே எம்எல்ஏக்கள் பி.ஆர்.ஜி. அருண்குமார், ஏ.கே.செல்வராஜ் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உட்பட தொண்டர்கள் குவிந்துள்ளனர்.


கோவை: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக நம்பர் 4 வீரபாண்டி பேரூராட்சியின் முன்னாள் தலைவர் ஜெயராமன் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையத்தை அடுத்துள்ள நம்பர் 4 வீரபாண்டி பேரூராட்சியின் தலைவராக கடந்த 2001 முதல் 2016-ம் ஆண்டு வரை இருந்தவர் அதிமுகவைச் சேர்ந்த கே.வி.என்.ஜெயராமன்.

இவர் தற்போது பெரியநாயக்கன் பாளையம் ஒன்றிய கிழக்கு செயலாளராக கட்சியில் செயல்பட்டு வருகிறார். இவருடைய மனைவி கீர்த்தி. இவரது ஆட்சி காலத்தில் வருமானத்தை விட அதிகமாக ரூ.1.45 கோடி சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. அந்த சொத்து மற்றும் நகைகள் அவரது பெயரிலும், மனைவி பெயரிலும் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த நிலையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் பேரூராட்சி தலைவர் கே.வி.என். ஜெயராமன் மற்றும் அவருடைய மனைவி கீர்த்தி உள்ளிட்டோர் மீது கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்த மறுதினமே இன்று அவரது வீடு உள்ள நம்பர் 4 வீரபாண்டி பகுதியில் உள்ள தாமோதரன் நகரில் உள்ள கே.வி.என்.ஜெயராமன் இன்று மதியம் முதல் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.



லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வரும் ஜெயராமனின் இல்லத்திற்கு வெளியே எம்எல்ஏக்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், ஏ.கே.செல்வராஜ் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உட்பட தொண்டர்கள் பலர் திரளாக குவிந்துள்ளனர்.

தி.மு.க ஆட்சி பொறுப்பை ஏற்றதும் கடந்த அ.தி.மு.க ஆட்சியின் போது நடைபெற்ற ஊழல்கள் தோண்டி துருவப்பட்டு வருகின்றன. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களின் வீடுகளில் வருமான வரித்துறை ரெய்டும் நடைபெற்றது. வழக்குப் பதிவும் செய்யப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, அ.தி.மு.க கோவை வடக்கு மாவட்டத்தை பொறுத்தவரை முக்கிய புள்ளியாக கருதப்படும் கே.வி.என்.ஜெயராமன் மற்றும் அவரது மனைவி மீது கோவை லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப் பதிவு செய்து சோதனையில் ஈடுபட்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...