கொரோனா எதிரொலி: கோவை உட்பட தமிழகம் முழுவதும் மருத்துவக் காப்பீடு திட்டங்களில் விண்ணப்பிப்போர் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரிப்பு..!

இதற்கேற்ப மருத்துவ காப்பீடு நிறுவனங்களும் மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.


கோவை: கொரோனா, ஓமிக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக கோவை உட்பட தமிழகம் முழுவதும் மருத்துவ காப்பீடு பெற விண்ணப்பிக்கும் மக்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக முகவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மருத்துவ காப்பீடு நிறுவனத்தில் பணியாற்றும் முகவர்கள் கூறியதாவது:-

பல வகையான காப்பீடு திட்டங்கள் செயல்பாட்டில் இருந்தாலும் விபத்து காப்பீடு, எதிர்கால சேமிப்புக்கு உதவும் காப்பீடு என்பது உள்ளிட்ட சில காப்பீடு திட்டங்களுக்கு மட்டுமே தென்னிந்திய மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகம் இருக்கும்.

மருத்துவ காப்பீடு திட்டத்தில் துவக்கம் முதல் இன்றுவரை பெரும்பாலும் வட மாநிலத்தைச் சேர்ந்த மக்களே விண்ணப்பித்து பயன் பெற அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக மருத்துவ காப்பீடு திட்டத்தில் பயனடையும் மக்கள் எண்ணிக்கை வட இந்தியாவில் தான் அதிகம் உள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் துவங்கிய போதே தென்னிந்தியாவில் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் மக்கள் மத்தியில் பீதியை ஏற்பட துவங்கியது. இரண்டாவது அலையில் உயிரிழப்புகள் அதிகம் இருந்தது மற்றும் சிகிச்சைக்கான செலவு மிக அதிகம் என்பதால் மக்கள் மருத்துவக் காப்பீடு திட்டங்கள் மீது கவனம் செலுத்த துவங்கினர்.

ஒருமுறை மருத்துவமனையில் அதிக பணம் செலுத்தி அதனால் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக எதிர்காலத்தை நினைத்து உடனடியாக மருத்துவ காப்பீடு பெற வேண்டும் என எண்ணி மருத்துவ காப்பீடு நிர்வாகங்களை மக்கள் நாடி வருகின்றனர்.

இன்றைய தேதியில் 15க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவக் காப்பீடு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவலுக்கு முன் ஒரு முகவர் ஒரு நாளைக்கு சராசரியாக 2 அல்லது 3 விண்ணப்பங்களை மட்டுமே பெரும் நிலை இருந்தது.

ஆனால், தற்பொழுது கொரோனா, ஓமிக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வரும் காரணத்தால் கோவை உட்பட தமிழகம் முழுவதும் தினமும் மருத்துவ காப்பீடு பெற விண்ணப்பிக்கும் மக்கள் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தினமும் மருத்துவ காப்பீடு முகவர் 8 அல்லது 10 விண்ணப்பங்கள் வரை பெரும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கேற்ப மருத்துவ காப்பீடு நிறுவனங்களும் மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.

தமிழகம் உட்பட தென்னிந்தியா முழுவதும் சமீபகாலமாக மருத்துவ காப்பீடு பெற விண்ணப்பிக்கும் மக்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வரும் போதிலும் இன்றைய சூழலிலும் மருத்துவ காப்பீடு திட்டங்களில் பயன்பெறும் மக்கள் எண்ணிக்கையில் வடமாநிலங்கள் தான் முன்னணியில் உள்ளன.

தென்னிந்தியாவில் தினந்தோறும் மருத்துவ காப்பீடு பெற விண்ணப்பிக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் காரணத்தால் எதிர்வரும் காலங்களில் வட மாநிலங்களைப் போல தென்னிந்தியாவில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்களும் மிக அதிக எண்ணிக்கையில் மருத்துவ காப்பீடு திட்டங்களில் பயன் பெறும் நிலை ஏற்படலாம்.

இவ்வாறு முகவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...