தஞ்சை மாணவி லாவண்யா தற்கொலைக்கு சிபிஐ விசாரணை நடத்தக் கோரி பொள்ளாச்சியில் இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை: தஞ்சை மாணவி லாவண்யா தற்கொலைக்கு சிபிஐ விசாரணை நடத்தக் கோரி பொள்ளாச்சியில் இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த லாவண்யா (17) என்ற மாணவி, விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

மாணவியை மதம் மாற பள்ளி நிர்வாகம் வற்புறுத்தியது தான் தற்கொலைக்குக் காரணம். இந்த உண்மையை காவல்துறை மற்றும் தமிழக அரசு மறைக்கப் பார்க்கிறது. எனவே இந்த விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறி பொள்ளாச்சி தலைமை தொலைப்பேசி நிலையம் முன்பு இந்து முன்னணியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்து முன்னணி மாநில செயலாளர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காவல்துறை, தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

பின்னர் அண்ணாதுரை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது, தஞ்சை கிறிஸ்தவப் பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை இந்து மாணவிக்கு இழைக்கப்பட்டுள்ள கொடூரம். மதமாற்றத்திற்கு வற்புறுத்தப்பட்டு தன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
ஆனால் மதமாற்றம் என்ற விஷயத்தை காவல்துறை தமிழக அரசு மூடி மறைக்கப் பார்க்கிறது. இது குற்றவாளிகளைத் தப்ப வைக்கும் முயற்சியாகும், தமிழக அரசு ஆட்சி பொறுப்பேற்றது முதல் இந்து மதத்துக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. கோயில் மீட்பு, மதமாற்றம் போன்ற பிரச்சினைகளில் இந்துக்களுக்கு எதிராகத் தமிழக அரசு செயல்படுகிறது.
எனவே இந்த வழக்கை சிபிஐ விசாரணை மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும் தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பணி நீக்கம் செய்ய வேண்டும், இல்லை என்றால் தமிழகம் தழுவிய போராட்டங்கள் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.