கோவை ஜி.சி.டி கல்லூரியில் சித்த மருத்துவ கொரோனா சிகிச்சை மையம்..!! மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்..!

இந்த மையத்தில் தற்போது 100 படுக்கைகள் போடப்பட்டுள்ளது. இந்த மையத்தில் சித்த வைத்திய மருந்து மாத்திரைகள் மூலிகை மருந்துகள் வைக்கப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.



கோவை: கோவை தடாகம் சாலையில் உள்ள அரசினர் பொறியியல் கல்லூரியில் மாவட்ட சித்த மருத்துவ துறை சார்பில் கொரோனா சிகிச்சை மையத்தை மாவட்ட ஆட்சியர் சமீரன் துவக்கி வைத்தார்.



இந்த மையத்தில் தற்போது 100 படுக்கைகள் போடப்பட்டுள்ளது.



மேலும் இந்த மையத்தில் சித்த வைத்திய மருந்து மாத்திரைகள் மூலிகை மருந்துகள் வைக்கப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவையில் கடந்த சில தினங்களாக தொற்றின் விகிதம் சற்று குறைந்துள்ளது. பொது மக்கள் கட்டாயமாக வைரஸ் தொற்று தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

கோவை மாவட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று கண்டறியப்பட்ட போதிலும் 11 சதவிகிதம் பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் இல்லங்களில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பொருத்தவரை 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. கோவையில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 97.6%. கோவையில் ஞாயிற்றுக்கிழமை பொழுது வெளியில் சுற்றித் தெரிந்தவர்களிடம் இருந்து 5 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் அலை சென்னையை விட கோவையில் கூடுதலாக உள்ளது. தொழிற்சாலைப் பகுதிகளில் தொற்று பரவல் காணப்பட்டதால் பொள்ளாச்சி, சூலூர் ஆகிய பகுதிகளில் தற்காலிகமாக தொழிற்சாலைகள் மூடப்பட்டு உள்ளது. குடியரசு தின விழா பார்வையாளர்கள் இன்றி நடைபெறும். சுதந்திரப் போராட்ட தியாகிகளின் இல்லங்களுக்குச் சென்று அவர்கள் கௌரவிக்கப்படுவார்கள் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். கோவையிலும் அது கடைபிடிக்கப்படும். மேலும், குடியரசு தின விழாவின் பொழுது குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுகிறது என தெரிவித்தார்.



இதில் மாவட்ட சித்த மருத்துவத் துறை அலுவலர் தனம் ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...