கோவையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்..! கூலி உயர்வு வழங்க கோரி கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம்

கடந்த 2014 ஆம் ஆண்டிற்குப் பிறகு 7 ஆண்டுகளாக விசைத்தறிகளுக்கான கூலி உயர்வு வழங்கப்படவில்லை என்பதை வலியுறுத்தி சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஜவுளி உற்பத்தியாளர்களை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.


கோவை: திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக உள்ள விசைத்தறி தொழிலில் ஜவுளி உற்பத்தியாளர்களிடம் இருந்து பாவு, நூல் வாங்கி அதனை காடா துணியாக உற்பத்தி செய்து கொடுத்து வருகின்றனர். அதற்கான கூலி நிர்ணயம் செய்து அதன் அடிப்படையில் கூலி வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், கடந்த 2014 ஆம் ஆண்டிற்குப் பிறகு 7 ஆண்டுகளாக விசைத்தறிகளுக்கான கூலி உயர்வு வழங்கப்படவில்லை என பல்வேறு புகார்கள் எழுந்து வந்தன. இந்நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டிலிருந்து புதிய கூலி உயர்வுக்கான கோரிக்கையை முன் வைத்து ஜவுளி உற்பத்தியாளர்களிடம் நடைபெற்ற பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது.

அப்பேச்சுவார்த்தைகள், தோல்வியில் முடிந்ததால், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜவுளி உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அதில், கலந்துகொண்ட மாநில அமைச்சர், மாவட்ட ஆட்சியர் மற்றும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், அறிவிக்கப்பட்ட பல்லடம் இரகத்திற்கு 20% சோமனூர் சரகத்திற்கு 23% கூலி உயர்த்தி முடிவு செய்யப்பட்டது.

ஆனால், இன்று வரை நிர்ணயக்கப்பட்ட தொகையை அமல்படுத்தாமல் உள்ள ஜவுளி உற்பத்தியாளர்களை கண்டித்து கடந்த 9 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.



இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை தொழிலாளர் நலத்துறை ஆணையத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்ததை தொடர்ந்து இன்று, காரணம்பேட்டையில் ஜவுளி உறபத்தியாளர்களை கண்டித்து திருப்பூர் கோவை மாவட்டங்களை சேர்ந்த பல்லடம், சோமனூர், வேலம்பாளையம் உள்ளிட்ட 9 சங்கங்களை சேர்ந்த விசைத்தறி உரிமையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



சுமார் 1000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஜவுளி உற்பத்தியாளர்களை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். இவர்களுக்கு, ஆதரவாக விவசாய சங்கத்தினரும்,சூலூர் சட்ட மன்ற உறுப்பினர் கந்தசாமியும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். கூலி உயர்வு தொடர்பாக வரும் 27ம் தேதி பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது.

Newsletter

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...