கோவை மாநகராட்சி மற்றும் RAAC மற்றும் NO DUMPING இணைந்து நடத்தும் வேலைவாய்ப்பு முகாம்

சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 6 நாட்கள் நடைபெற்று வரும் முகாமில் வேலை தேடும் பட்டதாரி ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என அனைவரும் ஜனவரி 26 ஆம் தேதி வரை பங்கேற்கலாம்.



கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் RAAC மற்றும் NO DUMPING இணைந்து நடத்தும் வேலைவாய்ப்பு முகாம் ஜனவரி 26 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.



கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் RAAC மற்றும் NO DUMPING இணைந்து நடத்தும் தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம் ஜனவரி 21 ஆம் தேதி துவங்கி 26 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 6 நாட்கள் நடைபெற்று வரும் முகாமில் தினசரி 100க்கும் மேற்பட்ட வேலை தேடும் பட்டதாரி ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் முகாமில் பங்கேற்று வருகின்றனர். 18 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் இலவச பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு முகாமினை பயன்படுத்தி வாழ்வாதாரத்தை மேம்படுத்தப் பங்கேற்றுவருகின்றனர்.

மேலும், இது குறித்து தனியார் அதிகாரி ஒருவர் கூறுகையில்; மத்திய அரசின் ஸ்வட்ச் பாரத் திட்டத்தின் கீழ் சுகாதாரம் மற்றும் வள மேலாண்மைத் துறையில் பணியாற்ற இந்த முகாம் நடைபெற்று வருகின்றது.



6 நாட்கள் நடைபெறும் இந்த முகாமில் தேர்வு செய்யப்பட்ட நபர்கள் 20 நாட்கள் பயிற்சிக்கு உட்படுத்த பின்பு துறையில் பணியாற்றுவார்கள் என்றும் மாற்றுத்திறனாளிகள் உரியத் தேர்விற்குப் பிறகு பணி நியமனம் வழங்கப்படும்.

300 பணியிடங்களுக்கான தேர்வு இம்முகாமின் மூலம் நடைபெறுகின்றது. மேலும், கோவை நகராட்சியுடன் இணைந்து பணியாற்றும் தனியார் நிறுவனங்களுக்கான பணிகள் இதன் மூலம் நியமிக்கப்படும்.

20 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில் திடக்கழிவு மேலாண்மை, மருத்துவ கழிவு மேலாண்மை குறித்த 10 நாள் பாட வகுப்புகளும் 10 நாள் நடைமுறை வகுப்புகளும் நடைபெறவுள்ளது என்றனர்.

Newsletter

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...