பிரதமரின் படத்தை பேரூராட்சி அலுவலகத்தில் அத்துமீறி மாட்டிய பாஜக நிர்வாகி கைது

கோவை பூலுவப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் பிரதமரின் உருவப்படத்தை மாட்டியதுடன், அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்த சம்பவத்தில் பாஜக நிர்வாகி பாஸ்கரனை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை பூலுவப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் பிரதமரின் உருவப்படத்தை மாட்டியதுடன், அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்த சம்பவத்தில் பாஜக நிர்வாகி பாஸ்கரனை போலீசார் கைது செய்தனர்.

கோவை தொண்டாமுத்தூர் ஒன்றியம் பூலுவபட்டி பேரூராட்சி அலுவலகம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் மாலை பாஜக தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் பாஸ்கரன் தலைமையில் நிர்வாகிகள் அனுமதியின்றி அலுவலகத்துக்குச் சென்றனர்.

மேலும் அங்கு பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை வைத்துள்ளனர். இதற்கு பேரூராட்சி செயலாளர் மற்றும் ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். முக கவசம் அணியாமலும் கும்பலாக அலுவலகத்திற்குள் வந்து அனுமதி இல்லாமல் புகைப்படத்தை வைத்ததாகப் புகார் தெரிவித்தனர்.

இதனால் பாஜகவினர் மற்றும் செயல் அலுவலர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் புகைப்படத்தை மாட்டி விட்டு அலுவலகத்துக்குள் கோஷம் எழுப்பினர். இந்த சம்பவ வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, பாஜகவினர் மீது செயல் அலுவலர் ரங்கசாமி ஆலாந்துறை போலீசில் புகார் அளித்தார். பின்னர் அத்துமீறி நுழைந்து புகைப்படம் வைத்தல், மிரட்டல் விடுத்தல், அரசு ஊழியர்களைப் பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் பா.ஜ.க அமைப்பு சார் தொழிலாளர் மாவட்ட தலைவர் பாஸ்கரன்( 39 ) இளைஞரணி செயலாளர் முருகேசன் ஆகிய இருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் இன்று காலை பாஸ்கரனை ஆலந்துறை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...