பொள்ளாச்சி கோட்டூர் சாலை அருகே கள்ளச்சந்தையில் மது பாட்டில்கள் விற்பனை - 174 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒருவரை கிழக்கு காவல் நிலைய போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: பொள்ளாச்சி கோட்டூர் சாலை அருகே கள்ளச்சந்தையில் மது பாட்டில்கள் விற்பனை - 174 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒருவரை கிழக்கு காவல் நிலைய போலீஸார் கைது செய்து நடவடிக்கை எடுத்தனர்.

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளதால் அரசு மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சிலர் கள்ளச்சந்தையில் மது பாட்டில்களைவிற்பனை செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில், பொள்ளாச்சி கோட்டூர்சாலையில் மது பாட்டில்களைப் பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதாகக் கிழக்கு காவல் நிலைய போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, உதவி ஆய்வாளர் திருமலை காவலர்கள் விஜய் சுரேஷ் மற்றும் ஜான்சன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில், ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்ட போது ஓம்பிரகாஷ் தியேட்டர் அருகே சாக்கு மூட்டையில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர்174 குவாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தங்கமணி என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.