கோவையில் தலைமறைவாக இருந்த குட்கா வியாபாரி கைது

கிணத்துக்கடவு பகுதியில் குட்கா புகையிலை பொருட்களை விநியோகம் செய்து தலைமறைவாக இருந்த வியாபாரியை காவல்துறையினர் கைது செய்தனர்.


கோவை: கிணத்துக்கடவு பகுதியில் குட்கா புகையிலை பொருட்களை விநியோகம் செய்து தலைமறைவாக இருந்த வியாபாரியை காவல்துறையினர் கைது செய்தனர்.

கடந்த 12-ந் தேதி கிணத்துக்கடவு காமராஜர் பகுதியில் ஒரு வீட்டில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக கிணத்துக்கடவு காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற கிணத்துக்கடவு காவல்துறையினர் சோதனையிட்டபோது அங்கு 133 கிலோ குட்கா புகையிலையைக் கைப்பற்றி வீட்டில் குட்கா புகையிலை பொருட்களைப் பதுக்கி வைத்திருந்ததாக ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதில் முக்கியக் குற்றவாளி அருண் குமரன் தலைமறைவாகி இருந்தார். அவரை காவல்துறை தீவிரமாகத் தேடி வந்தநிலையில் நேற்று ஈச்சனாரி அருகே பைபாஸ் சாலையில் ஒரு டீக்கடை அருகில் அருண் குமரன் இருப்பதாகத் தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, காவல்துறை அங்கு சென்று அருண் குமாரனைக் கைது செய்தனர். காவல்துறை விசாரணையில் அருண் குமரன் சொந்த ஊர் தர்மபுரி அருகே உள்ள நல்லாம்பள்ளி கிராமமாகும். இவர் கோவை அருகே உள்ள சுந்தராபுரத்தில் தங்கியிருந்து பெங்களூரிலிருந்து காய்கறிகளை மொத்தமாகக் கொள்முதல் செய்து கோவையில் காய்கறி கடைகளுக்கு விநியோகம் செய்துள்ளார்.

காய்கறி கொள்முதல் செய்யப் பெங்களூர் போகும் போது அங்கிருந்து குட்கா புகையிலை வாங்கி வந்து கிணத்துக்கடவு பகுதிக்கு விநியோகம் செய்துள்ளார் என்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...