ஊரடங்கு விதிமீறல்: பொள்ளாச்சியில் மட்டும் ரூபாய் 5.92 லட்சம் அபராதம்

பொள்ளாச்சியில் மட்டும் ஊரடங்கு விதிமீறல்களில் ஈடுபட்டவர்கள் மீது, மொத்தம் 1875-வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ 5-லட்சத்து 92-ஆயிரத்து 800-அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


கோவை: பொள்ளாச்சியில், ஊரடங்கு விதிமீறல்களில் ஈடுபட்டவர்கள் மீது ரூபாய் 5.92 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பு நடவடிக்கை தீவிரமாக உள்ளது. இதன் ஒரு பகுதியாகக் கடந்த 6-ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. மேலும் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக, பொள்ளாச்சி சரகத்திற்குட்பட்ட முக்கிய இடங்களில் டி.எஸ்.பி தமிழ்மணி உத்தரவின் பேரில் போலீசார்கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



மருத்துவ அவசரம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைக்கான வாகனங்களை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. தடையை மீறி செல்லும் பிறவாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

இதில், முக கவசம் அணியாமல் சுற்றித்திரிந்த 1271-பேருக்குமொத்தம் 2-லட்சத்து 90-ஆயிரத்து 800-அபராதம் விதிக்கப்பட்டது. சமூக இடைவெளியைப் பின்பற்றவில்லை என, வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 90-வழக்கு பதிவு செய்யப்பட்டு ரூ.45-ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், ஊரடங்கு விதிமுறைகளை மீறி தேவையில்லாமல் வெளியே வந்த 514-வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்து, ரூ 2-லட்சத்து 57-ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பொள்ளாச்சி உட்கோட்ட சரகத்திற்குட்பட்ட பகுதியில் மட்டும் போலீஸ் மூலம், மொத்தம் 1875-வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ 5-லட்சத்து 92-ஆயிரத்து 800-அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...