கோவையில் பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் பெண் சடலம்

ஆர்.எஸ்.புரம் அடுத்த சீரநாயக்கன்பாளையம் பகுதியில் பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் பெண் சடலம் இருந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


கோவை:பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் பெண் சடலம் இருந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை ஆர்.எஸ்.புரம் அடுத்த சீரநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி என்பவரின் மனைவி சரஸ்வதி (52). இவர் கருத்து வேறுபாடு காரணமாகத் தனது கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்தார்.

மேலும் கூலி வேலைக்குச் சென்று வந்த சரஸ்வதி தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார். இவரது மகன் சந்திரசேகர் உணவகத்தில் வேலை செய்துதனது குடும்பத்தோடு தனியாக வசித்து வருகிறார்.

அடிக்கடி தனது தாயாரை சந்திரசேகர் சென்று பார்த்துவிட்டு வருவது வழக்கம். மேலும் சரஸ்வதிக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் அதற்குச் சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை சரஸ்வதி வீட்டின் அருகில் வசிக்கும் நபர் ஒருவர் சந்திரசேகரைத் தொடர்புகொண்டு அம்மாவின் வீட்டின் கதவு திறக்கப்படாமல் உள்ளது என்றும் வீட்டின் உள்ளே இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் கூறியிருக்கிறார்.

இதையடுத்து, சந்திரசேகர் தனது அம்மா வீட்டிற்கு விரைந்து வந்தார். வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சரஸ்வதி அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து சந்திரசேகர் ஆர்.எஸ்.புரம்காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை உடலை அழுகிய நிலையிலிருந்த உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடல்நலக் குறைவினால் சரஸ்வதி இறந்து போனாரா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்பது குறித்தும் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...