விளாங்குறிச்சி ரோட்டில் புதிய சாலை பணிகள் துவக்கப்பட்டுள்ளது மட்டுமின்றி எதிர்வரும் நாட்களில் மக்கள் நலனுக்காக பல்வேறு சிறப்பான திட்டங்கள் சேரன்மாநகர் சுற்றுப்புறப் பகுதிகளில் திமுக அரசு சார்பில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்பதால், மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
கோவை:விளாங்குறிச்சி ரோட்டில் புதிய சாலை பணிகள் துவக்கப்பட்டுள்ளது மட்டுமின்றி எதிர்வரும் நாட்களில் மக்கள் நலனுக்காக பல்வேறு சிறப்பான திட்டங்கள் சேரன்மாநகர் சுற்றுப்புறப் பகுதிகளில் திமுக அரசு சார்பில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்பதால், மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
கோவை விளாங்குறிச்சி ரோட்டில் அமைந்துள்ளது சேரன்மாநகர் குடியிருப்புப்பகுதி. போக்குவரத்துக்கழக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்காகக் கட்டப்பட்ட இந்த சேரன் மாநகரில் மொத்தம் 568 வீடுகள் ஏ,பி, சி என்ற பிரிவுகளில் கட்டப்பட்டுள்ளன.
கடந்த பத்தாண்டுகளுக்கு முன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது சேரன் மாநகர் மற்றும் விளாங்குறிச்சி அதன் சுற்றுப்பகுதிகள் அசுர வளர்ச்சி அடைந்துள்ளன. அவிநாசி ரோட்டில் இருந்து சரவணம்பட்டி, சத்தி சாலை, மேட்டுப்பாளையம் சாலை உள்ளிட்ட பகுதிகளுக்கு நகருக்குள் வராமல் நேரடியாகச் செல்ல உதவுதல், தவிர டைடல் பார்க், கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் என எல்லாவற்றுக்கும் மேல் ஆயிரக்கணக்கான குடியிருப்புப் பகுதிகள் புதிதாக இந்த பகுதியில் கட்டப்பட்டுள்ளன.
இதன் காரணமாக விளாங்குறிச்சி ரோட்டில் தினமும் இயக்கப்படும் வாகனங்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த சாலை கடந்த 10 ஆண்டுகளாகச் சிதிலமடைந்து மிகவும் மோசமான நிலையிலிருந்து வருகிறது.
இத்தகைய சூழலில் நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி, விளாங்குறிச்சி ரோட்டை சீர்படுத்தி புதிய சாலை அமைக்க அடிக்கல் நாட்டி சென்றுள்ளார். இந்த செயல் மக்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதிய சாலைகள் மட்டுமல்ல, மக்கள் நலனுக்குத் தொடர்ந்து திமுக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தும்!
கோவை மேற்கு மாவட்ட திமுகமாணவரணி துணை அமைப்பாளர்,த. பிரபாகரன் கூறியதாவது:-
விளாங்குறிச்சி ரோடு மிகவும் சிதிலமடைந்து பயணிக்கவே முடியாத அவல நிலையில் கடந்த பத்தாண்டுகளுக்கு மேல் காட்சி அளிக்கிறது.கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்த அதிமுக அரசு பொதுமக்கள் தரப்பில் பல்வேறு கோரிக்கைகளைக் கொடுத்தபோதும் இப்பகுதியில் புதிய சாலை அமைக்கவோ, சிதிலமடைந்த சாலையைச் சீரமைக்கவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதிமுக., முன்னாள் அமைச்சர், எஸ். பி. வேலுமணி தொண்டாமுத்தூர் தொகுதியை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதன் காரணமாக விளாங்குறிச்சி ரோடு மட்டுமின்றி கோவை மாவட்டத்தில் பல்வேறு முக்கிய பகுதிகளில் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் இன்றும் உள்ளன.
கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள், அதைத்தொடர்ந்து கொரோனா மற்றும் ஓமிக்ரான் நோய்த்தொற்று பரவல் என புதிதாகப் பொறுப்பேற்ற அடுத்த நொடி முதல் தொடர்ந்து சவால்களைச் சந்தித்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின். கடுமையான நிதி நெருக்கடியிலிருந்த போதும் மக்கள் நலனுக்குத் தொடர்ந்து பல்வேறு திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்திக் கொண்டு வருகிறார்.
தற்போது விளாங்குறிச்சி ரோட்டில் புதிய சாலை பணிகள் துவக்கப்பட்டுள்ளது மட்டுமின்றி எதிர்வரும் நாட்களில் மக்கள் நலனுக்காக மேலும் பல்வேறு சிறப்பான திட்டங்கள் சேரன்மாநகர் சுற்றுப்புறப் பகுதிகளில் திமுக அரசு சார்பில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். கடந்த பத்தாண்டுகள் ஆட்சி செய்த அதிமுக அரசு மக்கள் நலனுக்காக ஆக்கப்பூர்வமான எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.